சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டா வழங்கியதில் முறைகேடு; கிராம மக்கள் ஆவேச முற்றுகை

Added : செப் 04, 2021
Share
Advertisement
கோவை:காரமடையில் முறைகேடாக பட்டா வழங்கியதாக கூறி, நுாற்றுக்கும் மேற்பட்டோர் கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.காரமடை எத்தப்ப நகரில் மூன்று மாதங்களுக்கு முன், 90 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. இதில் தவறு நடந்துள்ளதாகவும், ஏற்கனவே பட்டா பெற்றவர்களுக்கும், வேறு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும், முறைகேடாக பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு
 பட்டா வழங்கியதில் முறைகேடு; கிராம மக்கள் ஆவேச முற்றுகை

கோவை:காரமடையில் முறைகேடாக பட்டா வழங்கியதாக கூறி, நுாற்றுக்கும் மேற்பட்டோர் கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.காரமடை எத்தப்ப நகரில் மூன்று மாதங்களுக்கு முன், 90 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. இதில் தவறு நடந்துள்ளதாகவும், ஏற்கனவே பட்டா பெற்றவர்களுக்கும், வேறு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும், முறைகேடாக பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு தரப்பினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.குறிப்பிட்ட அந்த இடத்தில், 1999ம் ஆண்டிலேயே ஒரு சமூகத்தினருக்கு பட்டா போட்டு தரப்பட்டுள்ளது. அதே இடத்தில் இப்போது மீண்டும் வேறு நபர்களுக்கு பட்டா தரப்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பினர் இடையே கலவரம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.'இதை தவிர்க்கும் வகையில், மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும், முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும்' என்று போராட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறிய அதிகாரிகள், அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X