பொது செய்தி

தமிழ்நாடு

தினக்கூலி ரூ.605 வேண்டும் துாய்மை பணியாளர்கள் மனு

Added : செப் 04, 2021
Share
Advertisement
கோவை:கோவையில், துாய்மை பணியாளர்கள் பணி நேரம், அதிகாலை, 5:45க்கு பதிலாக, 7 மணியாக மாற்ற வேண்டும். தினச்சம்பளத்தை, 605 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என, கலெக்டரிடம் நேற்று மனு கொடுத்தனர்.கோவை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், காலை, 5:45க்கு பணிக்கு வர வேண்டும். 6:00க்கு வருகை பதிவு எடுக்கப்பட்டு, ஏரியா பிரித்துக் கொடுக்கப்படும். ஒப்பந்த பணியாளர்களுக்கு, கலெக்டர் நிர்ணயிக்கும்

கோவை:கோவையில், துாய்மை பணியாளர்கள் பணி நேரம், அதிகாலை, 5:45க்கு பதிலாக, 7 மணியாக மாற்ற வேண்டும். தினச்சம்பளத்தை, 605 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என, கலெக்டரிடம் நேற்று மனு கொடுத்தனர்.கோவை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், காலை, 5:45க்கு பணிக்கு வர வேண்டும். 6:00க்கு வருகை பதிவு எடுக்கப்பட்டு, ஏரியா பிரித்துக் கொடுக்கப்படும். ஒப்பந்த பணியாளர்களுக்கு, கலெக்டர் நிர்ணயிக்கும் தினக்கூலி வழங்கப்படும். நடப்பாண்டுக்கு, ரூ.475 என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.'பணி நேரத்தை, 7:00 மணியாக மாற்ற வேண்டும்; தினக்கூலியை ரூ.605 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரி, சமூக நீதி துாய்மை பணியாளர்கள் சங்கத்தினர் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் சங்கத்தினர், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திரண்டனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துராமலிங்கத்தை சந்தித்து மனு கொடுத்தனர்.துாய்மை பணியாளர்கள் கூறுகையில், 'மாநகராட்சி பகுதியில் குப்பை அள்ளும் எங்களை, நகருக்கு வெளியே குடியமர்த்தி இருக்கின்றனர். நகர் பகுதிக்குள் வீடு கொடுக்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள், இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X