பொது செய்தி

தமிழ்நாடு

மாரடைப்பு நோயாளிகளுக்கு 24 மணி நேரத்தில் ஆஞ்சியோகிராம்! தேசிய சுகாதார திட்ட இயக்குனர் அறிவுறுத்தல்

Added : செப் 04, 2021
Share
Advertisement
கோவை:மாரடைப்புடன் வரும் நோயாளிகளுக்கு, 24 மணி நேரத்தில் ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்க, தயாராக இருக்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டத்தின் கீழ், மாரடைப்புடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, 'ஸ்டெமி' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளுக்கு, மாரடைப்புடன் வரும்

கோவை:மாரடைப்புடன் வரும் நோயாளிகளுக்கு, 24 மணி நேரத்தில் ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்க, தயாராக இருக்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டத்தின் கீழ், மாரடைப்புடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, 'ஸ்டெமி' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளுக்கு, மாரடைப்புடன் வரும் நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதில், கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, 5 மாவட்டங்களுக்கு மண்டல மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.இதன் கீழ், முதன்மை சிகிச்சை மையங்களாக, குன்னுார், தாராபுரம், கோபிசெட்டிபாளையம், காங்கேயம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சத்தியமங்கலம், உடுமலைப்பேட்டை, ஈரோடு, பல்லடம், கோத்தகிரி, கூடலுார், மடத்துக்குளம், சூலுார் அன்னுார் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளும், நீலகிரி, கரூர், பெருந்துறை, இ.எஸ்.ஐ.,திருப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள், கிளை மையங்களாக செயல்படுத்தப்படவுள்ளது.இம்மருத்துவமனைகளை இணைத்து, வாட்ஸ் ஆப் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு வழிகாட்டியாக, கோவை அரசு மருத்துவமனையின் இருதயவியல் துறை டாக்டர் நம்பிராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.கிளை மருத்துவமனைக்கு மாரடைப்புடன், அபாய கட்டத்தில் வரும் நோயாளிகள் குறித்த தகவல்கள், இக்குழுவில் பதிவிடப்படும். குழுவில் உள்ள டாக்டர்கள், நோயாளிக்கு தேவையான சிகிச்சை, குறித்து ஆலோசனைகளை வழங்குவர். தேவைப்பட்டால் 24 மணி நேரத்திற்குள், அரசு மருத்துவமனையில் நோயாளியை அனுமதித்து ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கவும், நடவடிக்கை எடுக்கப்படும்.இந்நிலையில், கிளை மையங்களில் உள்ள டாக்டர்களுக்கு, தேசிய சுகாதார திட்ட இயக்குனர் தாரீஸ் அகமது, கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா ஆகியோர், ஆன்லைன் வழியாக திட்ட செயலாக்க வழிமுறைகளை விளக்கினர்.தாரீஸ் அகமது பேசுகையில், ''தற்போதைய சூழலில் தொற்றா நோய்கள் அதிகரித்து வருகின்றன. கட்டுப்பாடற்ற சர்க்கரை மற்றும் ரத்தகொதிப்பே, இதற்கு முக்கிய காரணம். இதனால், மாரடைப்புகளும் அதிகளவில் ஏற்படுகிறது. இதே நிலை நீடித்தால், இன்னும் 10 ஆண்டுகளில் பாதிப்புகள், இரண்டு மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, ஸ்டெமி திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். மாரடைப்பு நோயாளிகளுக்கு, 24 மணி நேரத்திற்குள் ஆஞ்சியோகிராம் சிகிச்சையளிக்கவும், தயாராக இருக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X