பொது செய்தி

தமிழ்நாடு

சாலையோரம் தவித்த முதியோர்: காப்பகத்தில் சேர்த்தார் தாசில்தார்

Added : செப் 04, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்:சிறுவாணி சாலை ஓரத்தில் இருந்த, 2 முதியவர்களை, பேரூர் தாசில்தார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தார்.தெலுங்குபாளையம் பிரிவு, சிறுவாணி ரோட்டில், சாலையோரத்தில் வயதான இரண்டு முதியவர்கள் தங்கியிருப்பதாக, வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த பேரூர் தாசில்தார் ரமேஷ், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தார்.விசாரணையில், முதியவர்கள்
 சாலையோரம் தவித்த முதியோர்: காப்பகத்தில் சேர்த்தார் தாசில்தார்

தொண்டாமுத்தூர்:சிறுவாணி சாலை ஓரத்தில் இருந்த, 2 முதியவர்களை, பேரூர் தாசில்தார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தார்.தெலுங்குபாளையம் பிரிவு, சிறுவாணி ரோட்டில், சாலையோரத்தில் வயதான இரண்டு முதியவர்கள் தங்கியிருப்பதாக, வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த பேரூர் தாசில்தார் ரமேஷ், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தார்.விசாரணையில், முதியவர்கள் சிவகாமி, 78, சுப்பிரமணியம், 72 ஆகிய இருவரும், செல்வபுரம், எழில் நகரை சேர்ந்தவர்கள் என்பதும், அப்பகுதி குடிசை மாற்று வாரியத்தால், புதுப்பிக்கப்பட்டு வருவதால், அப்பகுதியில் இருந்த மக்கள், மாற்று பகுதியில் சென்று வசிப்பதாகவும், தங்களால் வாடகைக்கு வீடு எடுத்து தங்க முடியாத நிலையில் இருப்பதாகவும், முதியவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து, முதியவர்கள் இருவரையும், ஆர்.எஸ்.,புரத்தில் உள்ள காப்பகத்தில் தங்க ஏற்பாடு செய்தார். தாசில்தாரின் இந்த செயல், அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X