பொது செய்தி

தமிழ்நாடு

கால்களில் சக்கரம்... கைகளில் சாகசம்!

Added : செப் 04, 2021
Share
Advertisement
வீடுகளில் முடங்கி கிடக்கும் சிறுவர்களில் பலர், ஆன்லைன் விளையாட்டுகளில் நேரத்தை வீணாக்குகின்றனர். சிலரே, தங்களுக்குள்ள தனித்திறமையை வளர்த்து கொண்டு, அதில் சாதனைகள் புரிந்து வருகின்றனர்.அவ்வகையில், கோவை தடாகம் சாலை, கே.என்.ஜி., புதூர் பிரிவு பகுதியை சேர்ந்த மகேந்திரன் நாகலட்சுமி தம்பதியின் மகன், 14 வயதான சந்தோஷ், 'வேவ் போர்டு' என்னும் பலகையில் சறுக்கியபடி, 'ஜக்லிங்'
 கால்களில் சக்கரம்... கைகளில் சாகசம்!

வீடுகளில் முடங்கி கிடக்கும் சிறுவர்களில் பலர், ஆன்லைன் விளையாட்டுகளில் நேரத்தை வீணாக்குகின்றனர். சிலரே, தங்களுக்குள்ள தனித்திறமையை வளர்த்து கொண்டு, அதில் சாதனைகள் புரிந்து வருகின்றனர்.அவ்வகையில், கோவை தடாகம் சாலை, கே.என்.ஜி., புதூர் பிரிவு பகுதியை சேர்ந்த மகேந்திரன் நாகலட்சுமி தம்பதியின் மகன், 14 வயதான சந்தோஷ், 'வேவ் போர்டு' என்னும் பலகையில் சறுக்கியபடி, 'ஜக்லிங்' செய்து சாதனைகள் படைத்து வருகிறார். .கணுவாய் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வரும் சந்தோஷ், கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், நேரத்தை வீணாக்காமல் தன் தந்தையிடமிருந்து 'ஜக்லிங்' செய்ய கற்று கொண்டுள்ளார். கற்று கொண்ட ஆறு மாதங்களிலேயே பயிற்சி எடுத்து, சாதனைகள் புரியும் அளவுக்கு, திறமையை வளர்த்து கொண்டுள்ளார் சந்தோஷ்.இவர் 'வேவ் போர்டு' எனப்படும் பலகையில் சறுக்கியபடி, ஒரு நிமிடத்தில் 3 பந்துகளை, 150 முறை மாற்றி மாற்றி பிடித்து சாதனை படைத்துள்ளார்.இவரின் திறமையின் மூலம், இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், பியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய சாதனை புத்தகங்களில், இடம் பெற்றுள்ளார்.சந்தோஷ் கூறுகையில், "பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் நேரத்தை வீணாக்காமல் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்தேன். தற்போது மூன்று பந்துகளை வைத்து ஒரு நிமிடத்தில், 150 முறை 'ஜக்லிங்' செய்து சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளேன். 'கின்னஸ்' புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதே இலக்கு. இதே போல், 'வேவ் போர்டில்' சறுக்கியபடி ஐந்து பந்துகளை வைத்து, 'ஜக்லிங்' செய்ய பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X