பொது செய்தி

தமிழ்நாடு

மாரத்தான் போட்டியா...எங்கே? ஓடி வருகிறார் இந்த 93 வயது இளைஞர்!

Added : செப் 04, 2021
Share
Advertisement
வீட்டு அருகில் இருக்கும் கடைகளுக்கு கூட, இருசக்கர வாகனத்தில் செல்லும் இக்கால இளைஞர்கள் மத்தியில், 93 வயதிலும் இளைஞர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு, மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று வருகிறார், ஓய்வு பெற்ற பேராசிரியர் தேவராஜ்.காந்திபுரம் பகுதியில் வசித்து வரும் பேராசிரியர் தேவராஜ், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.தினமும் காலை, 4:30
 மாரத்தான் போட்டியா...எங்கே? ஓடி வருகிறார் இந்த 93 வயது இளைஞர்!

வீட்டு அருகில் இருக்கும் கடைகளுக்கு கூட, இருசக்கர வாகனத்தில் செல்லும் இக்கால இளைஞர்கள் மத்தியில், 93 வயதிலும் இளைஞர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு, மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று வருகிறார், ஓய்வு பெற்ற பேராசிரியர் தேவராஜ்.காந்திபுரம் பகுதியில் வசித்து வரும் பேராசிரியர் தேவராஜ், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

தினமும் காலை, 4:30 மணிக்கு உடற்பயிற்சியுடன் துவங்குகிறது இவரின் நாள். 93 வயதிலும் காலை, 5 மணிக்கு தனது வீட்டில் இருந்து, தாமாகவே இருசக்கர வாகனத்தில் கிளம்பி பயிற்சிக்கு செல்லும் இவர், தினசரி குறைந்தது இரண்டு மணி நேரம் ஓடி பயிற்சி செய்கிறார்.பின்னர் நேரு ஸ்டேடியம் அருகில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்தில், உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.பள்ளி பருவம் முதலே, பல்வேறு தடகள போட்டிகளில் பங்கு பெற்று வெற்றியை குவித்த பேராசிரியர், 20 வருடங்களுக்கு முன் மாரத்தான் போட்டியில் பங்கேற்க துவங்கியுள்ளார்.கோவை 'பீனிக்ஸ் கிளப்'ல் கடந்த 4 வருடங்களுக்கு முன், தன்னை இணைத்துக்கொண்ட பேராசிரியர் தினமும், 5 முதல், 10 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி பயிற்சி மேற்கொள்கிறார்.நாட்டில் எந்த பகுதியில் மாரத்தான் போட்டி நடந்தாலும், பங்கேற்று ஐந்து கிலோ மீட்டர் நிறைவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். உடல் ஆரோக்கியமாக இருக்க, உடற்பயிற்சி செய்வது அவசியம் என, இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார், இந்த 93 வயது இளைஞர்.

இந்தியா மட்டுமில்லாமல் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளிலும், மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று உள்ளார்.''உடல் ஆரோக்கியம் என்பது, எல்லா மனிதர்களுக்கும் முக்கியமான ஒன்று. கடந்த, 20 வருடங்களாக மாரத்தான் போட்டிகளில், பங்கேற்று வருகிறேன். தினமும் உடற்பயிற்சி செய்தால், உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும்.இந்த வயதிலும் என்னால், நேரு ஸ்டேடியம் முதல் பீளமேடு வரை ஓட முடிகிறது. நூறு வயது வரை ஓட வேண்டும் என்பதே எனது ஆசை. ஒவ்வொரு இளைஞரும், காலையில் சிறிது நேரம் உடற்பயிற்சி மேற்கொண்டால், உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும்,"என்கிறார் தேவராஜ்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X