பொது செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி வழித்தடத்தில் மீண்டும் ரயில் ரயில் பயனாளிகள் சங்கம் அமைச்சருக்கு கடிதம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் இருந்து போத்தனுார் - பொள்ளாச்சி வழித்தடத்தில் ரயில்களை மீண்டும் இயக்குமாறு,மத்திய ரயில்வே அமைச்சருக்குகடிதம் எழுதப்பட்டுள்ளது.பொள்ளாச்சி ரயில் பயனாளிகள் சங்க செயலாளர் சுப்ரமணியன், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினிவைஷ்ணவுக்கு அனுப்பியுள்ள கடிதம்:கோவையையும், தென் தமிழகத்தையும் இணைக்கும் விதத்தில், போத்தனுார் - பொள்ளாச்சி - பழநி - திண்டுக்கல் அகல ரயில்

கோவை:கோவையில் இருந்து போத்தனுார் - பொள்ளாச்சி வழித்தடத்தில் ரயில்களை மீண்டும் இயக்குமாறு,மத்திய ரயில்வே அமைச்சருக்குகடிதம் எழுதப்பட்டுள்ளது.பொள்ளாச்சி ரயில் பயனாளிகள் சங்க செயலாளர் சுப்ரமணியன், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினிவைஷ்ணவுக்கு அனுப்பியுள்ள கடிதம்:கோவையையும், தென் தமிழகத்தையும் இணைக்கும் விதத்தில், போத்தனுார் - பொள்ளாச்சி - பழநி - திண்டுக்கல் அகல ரயில் பாதை உள்ளது. இவ்வழித்தடத்தில் ஏற்கனவே இயக்கப்பட்ட ரயில்கள் இதுவரை இயக்கப்படாததால், பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.எனவே, கோவையில் இருந்து போத்தனுார், பொள்ளாச்சி வழியாக ராமேஸ்வரம் தினசரி இரவுநேர ரயில், துாத்துக்குடிக்கு 'பாஸ்ட் பாசஞ்சர்' ரயில், மதுரைக்கு இன்டர்சிட்டி ரயில் உள்ளிட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்.ரயில்கள் இயக்கினால் ஊட்டி, வால்பாறை, பழநி, கொடைக்கானல், தனுஷ்கோடி, கோவையில் மருதமலை, ஆனைமலை மாசாணியம்மன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ராமேஸ்வரம் என பல்வேறு இடங்களுக்கு ஆன்மிகம், சுற்றுலா செல்லமுடியும்.தொழில் நகரான கோவையில் இருந்து டெக்ஸ்டைல், உற்பத்தி பொருட்கள், பொள்ளாச்சியில் தென்னை சார்ந்த பொருட்கள், ஒட்டன்சத்திரம் சந்தை, ராமேஸ்வரம் கடல் உணவுகள் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்துக்கு ஏதுவாக இருக்கும்.மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில்களை, பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும். இப்பகுதிகளுக்கு பஸ் கட்டணம் அதிகம்.மக்கள் தொகை, போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் சூழலில், ரயில்களை இந்த வழித்தடத்தில் இயக்கினால், அனைவருக்கும் உதவியாக இருப்பதுடன், வருவாயும் கிடைக்கும்.இவ்வாறு, அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X