பொது செய்தி

தமிழ்நாடு

வேலை செய்ய 'லேட்'... டெண்டர் 'கட்': டேவணித்தொகை பறிமுதல் செய்ய உத்தரவு

Added : செப் 04, 2021
Share
Advertisement
கோவை;கோவையில், புதிதாக ரோடு போடுதல், ஒட்டு போடுதல், மழை நீர் வடிகால் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள், அவற்றை செய்யாமல் தாமதித்ததால், ரத்து செய்ததோடு, டேவணித் தொகையை பறிமுதல் செய்ய, கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டார்.கோவை மாநகராட்சி பணிகளை, 'டெண்டர்' எடுக்கும் நிறுவனங்கள், மதிப்பீட்டில் ஒரு சதவீதத்தொகையை, டேவணித்தொகையாக வழங்க வேண்டும்.

கோவை;கோவையில், புதிதாக ரோடு போடுதல், ஒட்டு போடுதல், மழை நீர் வடிகால் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள், அவற்றை செய்யாமல் தாமதித்ததால், ரத்து செய்ததோடு, டேவணித் தொகையை பறிமுதல் செய்ய, கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டார்.கோவை மாநகராட்சி பணிகளை, 'டெண்டர்' எடுக்கும் நிறுவனங்கள், மதிப்பீட்டில் ஒரு சதவீதத்தொகையை, டேவணித்தொகையாக வழங்க வேண்டும். ஒப்பந்தப்பத்திரம் எழுதிக் கொடுத்ததும், 'ஒர்க் ஆர்டர்' வழங்கப்படும். கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், டெண்டர் இறுதி செய்யப்பட்ட பணிகளில், நிலுவை விபரங்கள் தொடர்பாக, பொறியியல் பிரிவினருடன் கமிஷனர் ராஜகோபால் ஆய்வு மேற்கொண்டார்.கான்கிரீட் சாலை போடுதல், தார் ரோட்டில் ஒட்டு போடுதல், சிறுபாலம், மழை நீர் வடிகால், கூடுதல் வகுப்பறை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு, டெண்டர் எடுத்த நிறுவனத்தினர், அவற்றை இன்னும் செய்யாமல் இருப்பது தெரியவந்தது. சில ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்தப்பத்திரமே எழுதிக் கொடுக்காமல் இருப்பதும் கண்டறியப்பட்டது.ரூ.8.50 கோடி மதிப்பிலான, 22 பணிகள் இன்னும் துவக்கப்படாமலேயே, நிலுவையில் இருப்பது பட்டியலிடப்பட்டது. அவற்றை ரத்து செய்த கமிஷனர், ஒப்பந்த விதிமுறையை மீறிய குற்றத்துக்காக, ஒப்பந்த நிறுவனத்தினர் வழங்கிய, ஒரு சதவீத டேவணித்தொகையை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.ஒப்பந்ததாரர்களிடம் பேசியபோது, 'டெண்டர் கோரும்போது, மதிப்பீட்டு தொகையில் ஒரு சதவீதம் டேவணித்தொகை, தேர்வு செய்யும் நிறுவனம் 'ஒர்க் ஆர்டர்' பெறும்போது, ஒரு சதவீதம் செலுத்த வேண்டும். பணிகள் முடிந்து பில் சமர்ப்பித்தால், 5 சதவீதத்தொகை நிறுத்தி வைக்கப்படும்.ஆறு மாதத்துக்குள் பணிகளில் தரக்குறைவு கண்டறிந்தால், இழப்பு தொகை பிடித்தம் செய்யப்படும். மீதமுள்ள தொகையை, அதன்பின் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள தொகைகளை கேட்டுக் கொண்டிருந்தோம். மாறாக, டேவணித்தொகையை பறிமுதல் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X