சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசாணை வெளியிட்டும் ஆசிரியர்கள் அலைக்கழிப்பு

Added : செப் 04, 2021
Share
Advertisement
கோவை:தமிழக அரசு ஜாக்டோ - ஜியோ போராட்டங்களில் பங்கேற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கைவிட, அரசாணை பிறப்பித்தும் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வருவதாக, அதிருப்தி எழுந்துள்ளது.கடந்த, 2019, ஜன., மாதம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இணைந்து காலவரையற்ற போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈடுபட்டனர். இச்சங்க நிர்வாகிகள் மீது

கோவை:தமிழக அரசு ஜாக்டோ - ஜியோ போராட்டங்களில் பங்கேற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கைவிட, அரசாணை பிறப்பித்தும் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வருவதாக, அதிருப்தி எழுந்துள்ளது.கடந்த, 2019, ஜன., மாதம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இணைந்து காலவரையற்ற போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈடுபட்டனர். இச்சங்க நிர்வாகிகள் மீது இடமாற்றம், நீதிமன்ற வழக்கு, ஊக்க ஊதியம் நிறுத்திவைப்பு உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டன.தமிழக அரசின் அரசாணை எண். 9ன் படி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால், கோவையில் இந்த அரசாணை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அரசு கூறுகையில், ''அரசாணை பிறப்பித்தும், கோவை காவல்துறை, நீதிமன்றம் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இதுவரை ரத்து செய்யாமல் உள்ளது. ''இது சார்ந்து, நவ., 1ம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராக வேண்டியுள்ளது. அரசாணையின் படி உரிய நடவடிக்கை எடுத்து, பணிகாலத்தை வரண்முறைபடுத்த கோரிக்கைவைத்துள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X