பொது செய்தி

தமிழ்நாடு

'நீட் தேர்வுக்கு இன்னும் ஒரே வாரம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
கோவை:நீட்., தேர்வை எதிர்கொள்ளவுள்ள மாணவர்கள், முதலில் ஹால்டிக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை, முறையாக படிக்க வேண்டும் என, கல்வியாளர் ஜெயபிரகாஷ்காந்தி அறிவுறுத்தியுள்ளார்.தேசிய தேர்வு முகமை சார்பில், மருத்துவ படிப்புகளுக்கான நீட்., தேர்வு செப்., 12ம் தேதி நாடு முழுவதும், 202 மையங்களில் நடக்கவுள்ளது.கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில், நீட்., தேர்வுக்கு அரசு, அரசு உதவி

கோவை:நீட்., தேர்வை எதிர்கொள்ளவுள்ள மாணவர்கள், முதலில் ஹால்டிக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை, முறையாக படிக்க வேண்டும் என, கல்வியாளர் ஜெயபிரகாஷ்காந்தி அறிவுறுத்தியுள்ளார்.தேசிய தேர்வு முகமை சார்பில், மருத்துவ படிப்புகளுக்கான நீட்., தேர்வு செப்., 12ம் தேதி நாடு முழுவதும், 202 மையங்களில் நடக்கவுள்ளது.கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில், நீட்., தேர்வுக்கு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மூலம், 397 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.கடந்தாண்டை ஒப்பிடுகையில், இப்பிரிவின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. கொரோனா காரணமாக போதிய வழிகாட்டுதல்கள், பயிற்சிகள் இல்லாமையே முக்கிய காரணம் என, பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது:தேர்வுக்கு குறைந்த நாளே உள்ள நிலையில், மாணவர்கள் நம்பிக்கையுடன் மனப்பதட்டம் இன்றி முழு ஈடுபாட்டுடன் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். என்.சி.இ.ஆர்.டி. புத்தகம், தேர்வு சார்ந்த பிற புத்தகங்களை முழுமையாக படித்து, தயார்படுத்திக்கொள்வது அவசியம். தற்போதைய கடுமையான போட்டிக்கு மத்தியில், பி.சி., ஓ.சி., பிரிவை சேர்ந்தவர்கள் 590, 600க்கு மேல் மதிப்பெண் பெற வேண்டிய சூழல் உள்ளது.உயிரியல் பாடத்தில் 360க்கு 350 மதிப்பெண், வேதியியலில் 180க்கு 150ம், இயற்பியலில் 180க்கு 100 மதிப்பெண்களும்பெறும் அளவிற்கு, இலக்கை நோக்கி பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.மறுமுறை தேர்வு எழுதுபவர்களின்(ரிப்பீட்டர்ஸ்) ஆதிக்கம் இருக்கும் எனினும், முதல் முறை தேர்வு எழுதுபவர்கள் பதட்டம் இன்றி, முழுமையாக படித்தால் வெற்றி பெற முடியும். அதிகாரப்பூர்வ இணையதளங்கள், தனியார் பயிற்சி மைய இணையதளங்களில், மாதிரி தேர்வுத்தாள்களை எடுத்து, முறையாக பயிற்சி எடுத்து, எதில் நாம் பலவீனமாக இருக்கின்றோம் என்பதை உணர்ந்து, அதில் பலப்படுத்திக்கொள்ள வேண்டும்.குறிப்பாக, ஹால்டிக்கெட்டில் உள்ள விதிமுறைகளை முழுமையாக படித்து, 'டிரஸ் கோடு', எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள் குறித்து, அறிந்து கொண்டு அதை பின்பற்ற வேண்டும்.கொரோனா பாதிப்பு காரணமாகபரிசோதனை, விதிமுறைகள் அதிகம் இருக்கும் என்பதால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே மையத்திற்கு செல்ல வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X