பொது செய்தி

தமிழ்நாடு

'சூரிய சக்தி தொழில் நுட்ப வல்லுனர்கள் தேவை அதிகம்'

Added : செப் 04, 2021
Share
Advertisement
வடவள்ளி:நேர்டு தொண்டு நிறுவனத்தின் மூலம், சூரிய மின்சக்தி நிலையம் அமைக்கும் சூரிய மித்ரா பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, வடவள்ளியில் நடந்தது.இதில், பயிற்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய பின், பன்னாட்டு எரிசக்தி வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் காமராஜ் பேசியதாவது:மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு சூர்யா திட்டத்தின்

வடவள்ளி:நேர்டு தொண்டு நிறுவனத்தின் மூலம், சூரிய மின்சக்தி நிலையம் அமைக்கும் சூரிய மித்ரா பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, வடவள்ளியில் நடந்தது.இதில், பயிற்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய பின், பன்னாட்டு எரிசக்தி வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் காமராஜ் பேசியதாவது:மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு சூர்யா திட்டத்தின் மூலம், 2022ம் ஆண்டிற்குள் 175 ஜிகாவாட் எரிசக்தியை புதுப்பிக்கக்கூடிய, எரி சக்தியின் மூலமாக உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் உடனடியாக தேவை.தமிழக அரசும், தமிழக சூரிய மின்சக்தி திட்டத்தின் மூலமாக வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில், சூரிய மின் திட்டம் நிறுவ, இலக்கு நிர்ணயித்துள்ளது. எனவே சூரிய சக்தி தொழில் நுட்ப வல்லுநர்கள் தேவை அதிகமாக உள்ளது.ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு, மூன்று மாத காலத்திற்கு தங்கும் மற்றும் உணவு வசதியுடன், சூரிய மின்சக்தி நிலையங்கள் அமைக்கும் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.18 முதல் 35 வயதுள்ள ஆண், பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சி முடித்தவுடன், சான்றிதழுடன் வேலைவாய்ப்பு செய்து தரப்படும்.சேர விரும்புபவர்கள், 9443934139 என்ற எண்ணில் அழைத்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X