'டிப்போ' உணவகங்களில் தரமற்ற உணவால் அவதி

Added : செப் 04, 2021
Share
Advertisement
கோவை:அரசு போக்குவரத்துக்கழக டிப்போஉணவகங்களில், சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டத்தின் கீழ், 45 பஸ் டிப்போக்கள் உள்ளன. கோவை மண்டலத்தில் உக்கடம், 1, 2 டிப்போ பணியாளர்களுக்கு, உக்கடம், 1 டிப்போவிலும், சுங்கம், 1, 2 டிப்போ பணியாளர்களுக்கு சுங்கம், 1 டிப்போவிலும் உணவகங்கள் செயல்படுகின்றன.இந்த

கோவை:அரசு போக்குவரத்துக்கழக டிப்போஉணவகங்களில், சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டத்தின் கீழ், 45 பஸ் டிப்போக்கள் உள்ளன. கோவை மண்டலத்தில் உக்கடம், 1, 2 டிப்போ பணியாளர்களுக்கு, உக்கடம், 1 டிப்போவிலும், சுங்கம், 1, 2 டிப்போ பணியாளர்களுக்கு சுங்கம், 1 டிப்போவிலும் உணவகங்கள் செயல்படுகின்றன.இந்த உணவகங்களில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மலிவு விலையில் பணியாளர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இதற்கென, உணவு தயாரிக்கும் ஒப்பந்தம், தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒப்பந்தப்படி சரியான நேரத்தில், உணவு தயாரித்து வழங்காததுடன், சுகாதாரமற்றதாகவும் உணவு வழங்கப்படுவதாக, பணியாளர்கள் புலம்புகின்றனர்.போக்குவரத்துக்கழக பணியாளர்கள் கூறுகையில், 'உக்கடம், 1 உணவகத்தில் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது. அதுவும் சரியான நேரத்தில் ஊழியர்களுக்கு கிடைப்பதில்லை. உணவக வளாகத்தையும் சுத்தமாக வைப்பதில்லை. இதற்கு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், உடனடி தீர்வு காண வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X