ஊருக்கு மட்டும்தான் புத்திமதி: சுகாதார துறை ஆபீசில் விதிமீறல் | Dinamalar

ஊருக்கு மட்டும்தான் புத்திமதி: சுகாதார துறை ஆபீசில் விதிமீறல்

Added : செப் 04, 2021
Share
கோவை:கோவை மாவட்ட சுகாதார துறை அலுவலகத்தில், கொரோனா விதிகளை கடைபிடிக்காமல், நேர்காணல் தேர்வு நடத்தப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டத்தில் கொரோனா மூன்றாம் அலை வந்தால், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.இதன் காரணமாக, பொது இடங்களில், முக கவசம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற

கோவை:கோவை மாவட்ட சுகாதார துறை அலுவலகத்தில், கொரோனா விதிகளை கடைபிடிக்காமல், நேர்காணல் தேர்வு நடத்தப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டத்தில் கொரோனா மூன்றாம் அலை வந்தால், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.இதன் காரணமாக, பொது இடங்களில், முக கவசம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, சுகாதார துறை சார்பில், தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனை பின்பற்றாத நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, அபராதம் விதிக்கப்படுகிறது.இந்நிலையில், நேற்று கோவை மாவட்ட சுகாதார துறை அலுவலகத்தில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல், ஆய்வக உதவியாளர் மற்றும் கண்காணிப்பாளர் பணிக்கு நேர்காணல் நடத்தப்பட்டது.நேர்காணலுக்கு வந்திருந்த 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு, உடல் வெப்ப பரிசோதனை, கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்குவது உள்ளிட்ட, எவ்வித நடவடிக்கையும் முறையாக நடக்கவில்லை. அங்கு அமர்வதற்கு இருக்கைகளும் இல்லாததால், கூட்டமாக நின்றபடி நேர்காணலில் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X