இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : செப் 04, 2021 | Added : செப் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பைக்கில் புகுந்த நல்ல பாம்பு கலெக்டர் ஆபீசில் பரபரப்புவிழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தியிருந்த பைக்கில் நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் ஊழியர்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்திற்கு வருவோர் வாகனங்களை நிறுத்துவர். கலெக்டர் அலுவலகத்தில் வேலைக்கு வந்த கொத்தனார்ஒருவர்,
இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'


பைக்கில் புகுந்த நல்ல பாம்பு கலெக்டர் ஆபீசில் பரபரப்பு


விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தியிருந்த பைக்கில் நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் ஊழியர்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்திற்கு வருவோர் வாகனங்களை நிறுத்துவர். கலெக்டர் அலுவலகத்தில் வேலைக்கு வந்த கொத்தனார்

ஒருவர், நேற்று மாலை 6:45 மணியளவில் தனது பைக்கை எடுக்கச் சென்றார்.அப்போது, பைக் பெட்ரோல் டேங்க் கீழே பாம்பு இருப்பது தெரியவந்தது. அங்கிருந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பைக்கை கீழே சாய்த்து பாம்பை வெளியே துரத்தினர். ஒரு அடி நீள நல்ல பாம்பு படமெடுத்து சீறியது. அதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். பின், அங்கிருந்த ஒருவர் குச்சி மூலம் பாம்பை பிடித்து, ஒரு பாட்டிலில் அடைத்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.


latest tamil newsபோக்சோ' சட்டத்தில் கைது :வாலிபருக்கு 17 ஆண்டு சிறை


புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுபட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 23. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண்ணும் காதலித்துள்ளனர். இருவரும் ஜூன் 18ல் வீட்டை விட்டு வெளியேறினர். பல இடங்களில் தேடி சிறுமியை பெற்றோர் மீட்டனர். மைனர் பெண்ணை கடத்தியதாக ரஞ்சித்குமாரை, கீரனுார் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர். மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், நீதிபதி சத்யா நேற்று ரஞ்சித்குமாருக்கு 17 ஆண்டுகள் சிறை, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


ஒரு மொபட்டில் நால்வர் பயணம்: 2 பெண்கள் பலி


திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்தவர் துரையன், 52. டி.வி.எஸ்., மொபட்டில், மனைவி புவனேஸ்வரி, 46, மாமியார் பாப்பாத்தி, பக்கத்து வீட்டு பெண் இந்திராணி, 48, ஆகியோருடன் தோட்ட வேலைக்குச் சென்றார். 'ஹெல்மெட்' அணியவில்லை. சாலைபுதுார் அருகே எதிரே வந்த மினி வேன் மொபட்டில் மோதியதில் நான்கு பேரும் துாக்கி வீசப்பட்டனர். வேனும், மொபட்டும் பள்ளத்தில் கவிழ்ந்தன. காயமடைந்த புவனேஸ்வரி, இந்திராணி ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தாசில்தாரை தாக்கிய தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு


திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் மகன் பாத்திமா சகாயராஜ், 52. மணப்பாறையில், நில வரி பிரிவு தாசில்தாராக பணிபுரிகிறார். மணப்பாறை ஜீவா தெருவை சேர்ந்தவர் கோபி, 51. நகர தி.மு.க., பொருளாளர்.தன் நிலம் தொடர்பான சர்வே எண்களையும், அதற்கு பக்கத்து இடங்களின் சர்வே எண்ணையும் கேட்டுள்ளார். கோபி கேட்டபடி, பக்கத்து நிலங்களின் சர்வே எண்களை கொடுக்க, தாசில்தார் சகாயராஜ் மறுத்து விட்டார். தாசில்தார் அலுவலகத்தில் இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கோபி, தாசில்தார் மேஜை மீது இருந்த பெயர் பலகையை எடுத்து சகாயராஜை தாக்கி உள்ளார். பதிலுக்கு அவரும், அருகில் இருந்த கட்டையை எடுத்து அடித்துள்ளார். தாசில்தார், மணப்பாறை போலீசில் புகார் அளித்தார். போலீசார், கோபி மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தாக்குதலில் காயம் அடைந்ததாகக் கூறி கோபி, மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். தாசில்தார் தாக்கப்பட்ட சம்பவம் பரவியதால், மணப்பாறை உட்பட திருச்சி மாவட்டம் முழுதும் உள்ள தாசில்தார் அலுவலகங்களில், வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நண்பரை தற்கொலைக்கு துாண்டியதால் கொன்றோம்: கைதானவர் வாக்குமூலம்


மந்தாரக்குப்பத்தில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.கடலுார் மாவட்டம் மந்தாரக்குப்பம் ஒம்சக்தி நகரைச் சேர்ந்தவர் அருண் (எ) அருள்குமார், 35; மனைவி ரம்யா, 9 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் அருண் கைதாகி, 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் இருந்தார். தண்டனை முடிந்து 4 மாதங்களுக்கு முன் வெளியே வந்தார்.பின், சிவகங்கையில் தனியார் வாட்டர் கம்பெனியில் வேலை பார்த்த அவர், சில வாரங்களுக்கு முன்பு மந்தாரக்குப்பம் ஓம்சக்தி நகரில் உள்ள சித்தி வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார். கடந்த 1 ம் தேதி இரவு இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் முன்பு முட்புதரில் அருண் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.இது தொடர்பாக ஐ.டி.ஐ.,நகரைச் சேர்ந்த பாம்புபாண்டியன் மகன் தேவா, 29; என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில், கடந்த மாதம் 25 ம் தேதி அருண், ஹரிகிருஷ்ணன், தேவா மற்றும் சில நண்பர்கள் சேர்ந்து மது அருந்தினர். அன்றிரவு தனது வீட்டில் ஹரிகிருஷ்ணன் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த தேவா, தனது நண்பர் ஹரிகிருஷ்ணன் சாவுக்கு அருண் தான் காரணம் என நினைத்தார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு, கடந்த 1ம் தேதி இரவு அருணை முட்புதருக்கு தனியாக அழைத்து சென்று சராமரியாக தாக்கி வெட்டி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இது தொடர்பாக மேலும் பலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


துப்பாக்கி சுடும் பயிற்சியில் போலீஸ்காரருக்கு கண் பாதிப்பு


கடலுார்-கடலுாரில் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது, வெடிமருந்து விழுந்து போலீஸ்காரர் கண் பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.போலீசார் துப்பாக்கி சுடும் திறனை அறிந்து கொள்ளவும், மேம்படுத்தவும் ஆண்டுக்கு ஒரு முறை துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கடலுார் மாவட்ட போலீசாருக்கு, கடந்த 28ம் தேதி முதல், கேப்பர்மலை ராமாபுரம் பயிற்சி தளத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியளிக்கப்படுகிறது. அவர்களுக்கு 303 ரைப்பில், ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.புவனகிரி போலீசார் நேற்று பயிற்சியில் பங்கேற்றனர். போலீஸ்காரர் கார்த்திக், 38, துப்பாக்கி குண்டு வெடிக்க செய்தபோது, வெடிமருந்து வலது கண்ணில் விழுந்தது. எரிச்சல் தாங்க முடியாமல் தவித்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு பின் புதுச்சேரி தவளக்குப்பம் அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


ஓட்டல் அறையில் 18 சவரன் அபேஸ் இருவரிடம் போலீஸ் விசாரணை


சென்னை, ஆலந்துார் பகுதியைச் சேர்ந்தவர் வீரராகவன், 56; வியாபாரி. இவரது மனைவி மஞ்சுளா, 50; இருவரும் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் உள்ள உறவினர் பெண்ணின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தனர்.நேற்று 3ம் தேதி திருமணம் என்பதால் நேற்று முன்தினம் இரவு மண்டபத்தின் அருகே உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். அப்போது, மஞ்சுளா அணிந்திருந்த செயின், வளையல் உள்ளிட்ட 18 சவரன் நகைகளைக் கழற்றி டேபிள் மேல் வைத்து விட்டு கதவைப் பூட்டாமல் துாங்கியுள்ளனர். நேற்று காலை எழுந்து பார்த்த போது நகைகளைக் காணவில்லை.இதுகுறித்து வீரராகவன் அளித்த புகாரின் பேரில், போலீசார், விடுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அதிகாலை 4:15 மணியளவில் விடுதியின் பக்கத்து அறையில் தங்கியிருந்த திருமணத்திற்கு வந்திருந்த நபர், வீரராகவன் அறைக்குச் சென்றது பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில், அவரிடமும், அவருடன் தங்கியிருந்த நபரிடமும் விசாரித்து வருகின்றனர்.


இந்திய நிகழ்வுகள்ஆன்லைனில் போதை விற்பனை ஜார்க்கண்டின் இருவர் சிக்கினர்


ஒயிட்பீல்டு:ஆன்லைன் மூலம் போதைப்பொருள் விற்று வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இருவர் சிக்கினர். இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெங்களூரு ஒயிட்பீல்டில் ஆன்லைன் மூலம் போதைப்பொருள் விற்பதாக, சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று காலை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.அப்போது, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, 150 போதை மாத்திரைகள்; 400 கிராம் எடை கொண்ட போதை உருண்டைகள்; 180 போதைப்பொருள் பாக்கெட்கள்.மேலும், 3.5 லிட்டர் கஞ்சா எண்ணெய்; 30 கிலோ கஞ்சா உட்பட இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


என்கவுன்டர்' வேண்டாம் பெற்றோர் வற்புறுத்தல்


மைசூரு:'மைசூரில் மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் ஈடுபட்டுள்ளவர்களை எந்த காரணத்துக்கும் சுட்டு கொன்று விடாதீர்கள்' என, அவர்களின் பெற்றோர் போலீசாரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
மைசூரு சாமுண்டி மலையில் ஆகஸ்ட் 24ல் எம்.பி.ஏ., மாணவியை ஏழு பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இந்த கொடூரம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த, ஆறு பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.அவர்கள் குற்றம் நிகழ்த்திய இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்களில் தலைமறைவாக உள்ள ஒருவர் தேடப்பட்டு வருகிறார். தற்போது, ஆறு பேரையும் மைசூரு போலீசார் தமிழகம் அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.

அவர்கள் மைசூரு வந்தது எப்படி; தலைமறைவாக இருந்தது எப்படி என்பனவற்றை விசாரிக்கின்றனர்.இதற்கிடையில், பாலியல் பலாத்காரம் செய்தவர்களை என்கவுன்டர் முறையில், சுட்டு தள்ளும்படி பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இது, தமிழகத்தின் தாளவாடி, சத்தியமங்கலம், ஈரோடு, திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், எந்த காரணத்துக்கும் அவர்களை என்கவுன்டர் செய்ய வேண்டாம் என்று அவர்களின் பெற்றோர் போலீசாரிடம் வலியுறுத்தியுள்ளனர். ஆனாலும் பெற்றோர் பீதியில் உள்ளனர்.


உலக நிகழ்வுகள்நியூசிலாந்தில் பயங்கரவாதி சுட்டுக்கொலை


வெல்லிங்டன்:நியூசிலாந்தில் மார்க்கெட்டில் நடந்த கத்திக்குத்தில் ஆறு பேர் படுகாயமடைந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை போலீசார் சுட்டுக்கொன்றனர்.நியூசிலாந்தின் ஆக்லாந்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குள் நேற்று மர்ம நபர் நுழைந்தார். கண்ணில் தென்பட்ட அனைவரையும் அவர் கத்தியால் குத்தினார். இதில் கடைக்காரர்கள் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மார்க்கெட்டை சுற்றி வளைத்தனர். தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர்.
தாக்குதல் நடத்திய நபர், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பிற்கு தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.இது குறித்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் கூறியதாவது:ஆக்லாந்து மார்க்கெட்டில் நடந்தது பயங்கரவாத தாக்குதல். கத்திக்குத்தில் ஈடுபட்டவர் இலங்கையை சேர்ந்தவர். அவர் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர். நியூசிலாந்தில் வசித்து வந்த அவரை 2016 முதல் போலீசார் கண்காணித்து வந்தனர். சட்ட ரீதியிலான காரணங்கள் இல்லாததால் அவரை கைது செய்ய முடியாமல் இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


'ஐடா' புயல் 45 பேர் பலி


நியூயார்க்:அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய 'ஐடா' புயலுக்கு 45 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வடகிழக்கு கடல் பகுதியில் உருவான ஐடா புயல், சமீபத்தில் மேரிலாண்டு முதல் மாசாசூசெட்ஸ் மாகாணம்வரையில் உள்ள பல நகரங்களை கடுமையாக தாக்கியது. மணிக்கு 241 கி.மீ., வேகத்தில் வீசிய புயல் மற்றும் மழை, வெள்ளத்தில் சிக்கி 45 பேர் பலியானதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இடைவிடாது பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது.

நியூயார்க்கில்பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்ததால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. ஏராளமான வீடுகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றுள் வெள்ளம் புகுந்தது. அடுக்குமாடி குடியிருப்புகளில் முதல் தளம் வரை வெள்ளம் புகுந்ததை அடுத்து அங்கிருந்தவர்கள் மேல் தளத்திற்கு சென்றனர். நியூஜெர்சி, பென்சில்வேனியா, ரோடி ஐலண்ட் உள்ளிட்ட பகுதிகளில் 23 செ.மீ., மழை பெய்துள்ளதள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayaraman -  ( Posted via: Dinamalar Android App )
06-செப்-202105:31:27 IST Report Abuse
Jayaraman பைக் உள்ளே , பாம்பு நுழைவது , எப்படி குற்ற செயலாகும்.துப்பாக்கி சுடும் போது, கண்ணில் வெடிமருந்து படுவது , எப்படி குற்ற செயலாகும்புயல் பாதிப்பு , எப்படி குற்ற செயலாகும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X