பணப்பலன்களை வழங்க ேவண்டும் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பணப்பலன்களை வழங்க ேவண்டும் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை

Added : செப் 04, 2021
Share
கோவை:பணப்பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, போக்குவரத்துக்கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு, வேண்டுகோள் விடுத்துள்ளது.ஒன்பது தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பினர், போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் அளித்த மனு:கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தவறுகளை சரிசெய்து, போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை:பணப்பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, போக்குவரத்துக்கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு, வேண்டுகோள் விடுத்துள்ளது.ஒன்பது தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பினர், போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் அளித்த மனு:கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தவறுகளை சரிசெய்து, போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வழங்க வேண்டும்.பேச்சுவார்த்தையை துவங்கி, ஊதிய ஒப்பந்தம் உருவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்துக்கழகங்களில் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய, பல்வேறு பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஓய்வூதியர்களுக்கு ஊதிய ஒப்பந்தங்களுக்கேற்ப, அடிப்படை ஓய்வூதியத்தை முறைப்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். உரிய தேதியில் சம்பளம் வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X