பொது செய்தி

தமிழ்நாடு

8,000 பேருக்கு சித்த மருந்து பெட்டகம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
முடிச்சூர் : முடிச்சூர் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில், 8,000 பேருக்கு, சித்த மருந்து பெட்டகம், வீடு வீடாக இலவசமாக வழங்கப்பட்டது.தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சியின் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பினர், கொரோனா பரவலின், முதல் அலை துவங்கியது முதல் தற்போது வரை, நோய் தடுப்பு பணிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இதன் ஒரு
 8,000 பேருக்கு சித்த மருந்து பெட்டகம்

முடிச்சூர் : முடிச்சூர் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில், 8,000 பேருக்கு, சித்த மருந்து பெட்டகம், வீடு வீடாக இலவசமாக வழங்கப்பட்டது.

தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சியின் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பினர், கொரோனா பரவலின், முதல் அலை துவங்கியது முதல் தற்போது வரை, நோய் தடுப்பு பணிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, தேசிய சித்த மருத்துவமனை நிறுவனம், முடிச்சூர் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பின் சார்பில், நேற்று, கபசுர குடிநீர், அமுக்ரா சூரணம் அடங்கிய, சித்த மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது.

மொத்தம், 8,000 பேருக்கு, வீடு வீடாக சென்று, மருந்து பெட்டகத்தை, அந்த பகுதி நலச்சங்க நிர்வாகிகள் வழங்கினர்.ஊராட்சியில் வசிக்கும் மீதமுள்ள, 12 ஆயிரம் பேருக்கு, விரைவில் மருந்து பெட்டகம் வழங்கப்பட உள்ளதாக, சித்த மருத்துவ நிறுவன இயக்குனர், மீனாகுமாரி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X