பொது செய்தி

தமிழ்நாடு

விதிமீறிய கடைகளுக்கு அபராதம்; செம்பாக்கம் நகராட்சி நடவடிக்கை

Added : செப் 04, 2021
Share
Advertisement
செம்பாக்கம் : செம்பாக்கம் நகராட்சியில், தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வந்த, கடைகளுக்கு இரண்டு நாட்களில், 12 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.செம்பாக்கம் நகராட்சியில், 170க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் இயங்கி வருகின்றன.ஊரடங்கு தளர்விற்கு பின், இவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை, கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.
 விதிமீறிய கடைகளுக்கு அபராதம்; செம்பாக்கம் நகராட்சி நடவடிக்கை

செம்பாக்கம் : செம்பாக்கம் நகராட்சியில், தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வந்த, கடைகளுக்கு இரண்டு நாட்களில், 12 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

செம்பாக்கம் நகராட்சியில், 170க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் இயங்கி வருகின்றன.ஊரடங்கு தளர்விற்கு பின், இவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை, கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு, சிகிச்சைக்கான ஏற்பாடுகளை, நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

அப்போது, கடைகளில் சோதனை நடத்தி, நோய் தடுப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுகிறதா என, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.இதில், கடந்த, இரண்டு நாட்களாக, மாடம்பாக்கம் பிரதான சாலையில், இயங்கி வரும் ஓட்டல்கள் விதிகளை மீறி செயல்படுவதாக, சமூக ஆர்வலர்கள், நகராட்சியின் சுகாதார ஆய்வாளர், சிவக்குமாரிடம், புகார் தெரிவித்தனர்.

தொடர்ந்து, அந்த கடைகளுடன் சேர்த்து, விதிமீறிய, 9 கடைகளுக்கு, நேற்று முன்தினம், 8 ஆயிரம் ரூபாயும், நேற்று, 4 ஆயிரத்து 500 ரூபாய் என, 12 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.கடந்த ஒரு மாதத்தில் மட்டும், முக கவசம் அணியாத பொது மக்கள், 170 பேரிடம், 200 ரூபாயும், விதிமீறிய, 70 கடைகளிடம் தலா, 500 ரூபாய் வீதம், 67 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X