பொது செய்தி

தமிழ்நாடு

போலி பதிவு எண் வாகனங்கள்; சோதனையில் போலீசார் திணறல்

Added : செப் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மாதவரம் : போக்குவரத்து விதிகளை மீறும், போலி பதிவு எண் கொண்ட வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யும் போக்குவரத்து போலீசார், சிக்கலில் திணறுகின்றனர்.சென்னை அடுத்த மாதவரம், புழல், கொளத்துார், கொரட்டூர், செங்குன்றம், அம்பத்துார், ஆவடி, திருவேற்காடு சுற்றுவட்டாரங்களில் பயன்படுத்தப்படும் பல இருசக்கர வாகனங்களின் பதிவு எண், 'போலி'யானவையாக உள்ளன. அந்த எண்களை தங்களது
 போலி பதிவு எண் வாகனங்கள்; சோதனையில் போலீசார் திணறல்

மாதவரம் : போக்குவரத்து விதிகளை மீறும், போலி பதிவு எண் கொண்ட வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யும் போக்குவரத்து போலீசார், சிக்கலில் திணறுகின்றனர்.

சென்னை அடுத்த மாதவரம், புழல், கொளத்துார், கொரட்டூர், செங்குன்றம், அம்பத்துார், ஆவடி, திருவேற்காடு சுற்றுவட்டாரங்களில் பயன்படுத்தப்படும் பல இருசக்கர வாகனங்களின் பதிவு எண், 'போலி'யானவையாக உள்ளன. அந்த எண்களை தங்களது வாகனங்களுக்கு பயன்படுத்துவோர், போக்குவரத்து விதி மீறியோ அல்லது நகை, மொபைல் போன் பறிப்பு போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு சிக்கினால், வாகன பதிவு எண் மூலம் அவற்றின் உண்மையான உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

அதற்கான அபராதம் வசூலிக்க, அவர்களது மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி வருகிறது. இதற்கு உதாரணமாக, சென்னை செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகரைச் சேர்ந்த பழனி என்பவருக்கு, சமீபத்தில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக, போக்குவரத்து போலீசாரால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட வழக்கு விவர தகவல், அவரது மொபைல் போனுக்கு சென்றது. அதிலும், அவர் பயன்படுத்தியது சரக்கு வாகனம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால், நான்கு சக்கர சரக்கு வாகனம் ஓட்டியவருக்கு தலைக்கவசம் அணியாததால் அபராதம் விதிக்கப்பட்ட தகவல், 'வாட்ஸ் ஆப்'பில் வேகமாக பரவி கேலிக்குறியதாக ஆனது. போக்குவரத்து போலீசார் கவனக்குறைவாக பணியாற்றுவதாகவும் விமர்ச்சிக்கப்பட்டது. இது குறித்து, சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசாரிடம் விசாரித்த போது, 'நாங்கள், போக்குவரத்து விதிமீறிய இரு சக்கர வாகனத்திற்கு தான் அபராதம் விதித்தோம்.

ஆனால், அந்த வாகன உரிமையாளர், குறிப்பிட்ட சரக்கு வாகனத்தின் பதிவு எண்ணை போலியாக பயன்படுத்தியது இப்போது தெரிந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது, சென்னை மற்றும் புறநகர்களில் தொடர்கின்றன. இது குறித்து, மோட்டார் வாகன வட்டார போக்குவரத்து அதிகாரிகள், அவ்வப்போது வாகன சோதனை நடத்தி, போலி பதிவு எண் கொண்ட வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட, பல குற்றச் சம்பவங்கள் தவிர்க்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-செப்-202106:28:58 IST Report Abuse
அப்புசாமி தினமும் ஒரு 10 பேரைப் பிடிச்சு சிங்கப்பூர் ஸ்டைலில் பின்னாடி பிரம்படி குடுத்தால் குற்றங்கள் குறையும். இங்கே என்னடான்னா மாமூல் வாங்கியே வயிறு/தொப்பை வளர்க்கும் போலுஸ்தான் அதிகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X