இலவச பட்டா நிலம் ஆக்கிரமிப்பா? தி.மு.க., மாஜி கவுன்சிலர் மீது புகார் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இலவச பட்டா நிலம் ஆக்கிரமிப்பா? தி.மு.க., மாஜி கவுன்சிலர் மீது புகார்

Added : செப் 04, 2021
Share
அவிநாசி:அவிநாசி, மடத்துப்பாளையம், வினோபா வீதியை சேர்ந்த பழனி, அவரது மனைவி லட்சுமி என்பவர், போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் வழங்கிய மனு:வீட்டுமனைப்பட்டா கேட்டு, ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தாரிடம் மனு அளித்ததன் அடிப்படையில், 1998, மார்ச், 11ல் எனக்கு பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தை, எனது மூத்த மகனுக்கு, கடந்த, 2012, ஜன., 6ல், கிரயம் எழுதி கொடுத்தேன்.நான், எனது கணவர் மற்றும் இளைய மகன்

அவிநாசி:அவிநாசி, மடத்துப்பாளையம், வினோபா வீதியை சேர்ந்த பழனி, அவரது மனைவி லட்சுமி என்பவர், போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் வழங்கிய மனு:வீட்டுமனைப்பட்டா கேட்டு, ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தாரிடம் மனு அளித்ததன் அடிப்படையில், 1998, மார்ச், 11ல் எனக்கு பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தை, எனது மூத்த மகனுக்கு, கடந்த, 2012, ஜன., 6ல், கிரயம் எழுதி கொடுத்தேன்.நான், எனது கணவர் மற்றும் இளைய மகன் வீடின்றி இருந்ததால், அப்போது கவுன்சிலராக இருந்த ரவிராஜ் (தி.மு.க.,) என்பவரிடம், இலவச பட்டா வாங்கி தருமாறு கேட்டோம். எனது பெயரில் ஒரு பட்டாவை வாங்கி கொடுத்தார்.அதனை என் கணவர் பெயருக்கு மாற்றி கொடுப்பதாக கூறி, 80 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கினார். அங்கு குடிசை அமைத்து வாழ்ந்து வந்த நிலையில், மின் இணைப்பு இல்லாததால், எனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறேன்.அந்த நிலத்தில், கடந்த, 1ம் தேதி, கூரையை அகற்றிவிட்டு, வீடுகட்ட சென்ற போது, ரவிராஜ், கூறியதன் அடிப்படையில், ஒருவர் ஆக்கிரமித்து இருந்தார். இது குறித்து ரவிராஜிடம் கேட்டதற்கு, என்னை திட்டி, தாக்கினார். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்டு கொடுப்பதுடன், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார்.

'பொய் புகார்'
இதுகுறித்து தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் ரவிராஜிடம் கேட்டபோது, ''லட்சுமி சின்னசாமி, என்பவர் தனது பட்டாவை தனது மகன் பெயரில் கிரயம் செய்து கொடுத்து விட்டு, தனது பெயரில் மற்றொரு பட்டா பெற்றுத்தருமாறு கூறினார். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டா வழங்க சட்டத்தில் இடமுண்டு எனக்கூறிய போதும், அவரது பட்டா நிலத்துக்கு அருகே லட்சுமி பழனி என்ற வெளியூர் நபர் பெயரில் இருந்த பட்டாவை தன்னுடையது எனக்கூறி வருகிறார். நான் பணம் பெற்று ஏமாற்றியதாக, பொய்யான புகார் கொடுத்துள்ளார்'' என்றார்.இந்த விவகாரம் வருவாய் துறையினரின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X