பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்களில் மாணவர் அலப்பறை; மாறுவேடத்தில் போலீசார் வலம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
சென்னை : புறநகர் மின்சார ரயில்களில், மோதலில் ஈடுபடும் மாணவர்களை பிடிக்க, போலீசார் மாறுவேடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கொரோனா ஊரடங்கு தளர்வால், இம்மாதம் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, சென்னை புறநகர் ரயில்களில் கல்லுாரி மாணவர்களின் கூட்டம்
 ரயில்களில் மாணவர் அலப்பறை; மாறுவேடத்தில் போலீசார் வலம்

சென்னை : புறநகர் மின்சார ரயில்களில், மோதலில் ஈடுபடும் மாணவர்களை பிடிக்க, போலீசார் மாறுவேடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு தளர்வால், இம்மாதம் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, சென்னை புறநகர் ரயில்களில் கல்லுாரி மாணவர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.

கல்லுாரி துவங்கிய முதல் நாளே வியாசர்பாடி, கொரட்டூர் ரயில் நிலையங்களில், மாநில கல்லுாரி, பச்சையப்பன் கல்லுாரி மாணவர் மோதலில் ஈடுபட்டனர். அபாயசங்கிலியை பிடித்து இழுத்து, ரயிலை நிறுத்தி அலப்பறை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், பொது பயணியர் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். ரயிலில், மாணவர்களின் அட்டூழியத்தை தடுக்க காலை, மதியம் மற்றும் மாலை வேளைகளைகளில் இயக்கப்படும், மின்சார ரயில்களில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்ட்ரலில் இருந்து, ஆவடி மற்றும் எண்ணுார் வரை ரயிலில், ஒரு ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ., தலைமையில், இரண்டு காவலர்கள், மாறுவேடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடற்கரை - தாம்பரம் இடையேயும், மின்சார ரயில்களில், இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. போலீசாரால் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கையில் சிக்கினால், எதிர்காலம் பாதிக்கப்படுவது குறித்து, மாணவர்களுக்கு, கல்லுாரி முதல்வர்கள் விழிப்புணர்வு ஆலோசனை வழங்கவும், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாரால் கேட்டுக்கொண்டுள்ளனர்.


எம்.டி.சி., பஸ்சில் தாளம்; மாணவர்களிடம் விசாரணை


கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பச்சையப்பன் கல்லுாரியின் பி.காம், இரண்டாம் ஆண்டு மாணவர்கள், 9 பேர் நேற்று, வழித்தடம் எண், 50 பஸ்சில் தாளம் போட்டு சத்தம் எழுப்பியவாறு பயணித்தனர்.செயின்ட் ஜார்ஜ் பள்ளி அருகே சென்ற போது, நடத்துனர் பஸ்சை நிறுத்தினார். அருகே நின்று கொண்டிருந்த டி.பி.சத்திரம் ஆய்வாளரிடம், பஸ்சில் தாளம் போட்டு சத்தம் எழுப்பிய மாணவர்கள் குறித்து புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, மாணவர்கள், 9 பேரையும் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் விசாரித்தனர். இதில், முகலிவாக்கத்தைச் சேர்ந்த, பாலமுருகன், 20, நசரத்பேட்டையைச் சேர்ந்த கோகுல், 18 உட்பட ஒன்பது பேர் தாளம் போட்டது தெரியவந்தது. தொடர்ந்து மாணவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X