பொது செய்தி

தமிழ்நாடு

பவானி வெள்ளப்பெருக்கு: சங்கொலி முழக்க ஆய்வு

Added : செப் 04, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:பவானி ஆற்றில், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை பொதுமக்களுக்கு அறிவிக்கும் விதத்தில், எச்சரிக்கை சங்குகள் அமைப்பதற்கான இடங்களை, கோவை வடக்கு ஆர்.டி.ஒ., ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.பில்லுார் அணையில் இருந்து, திறந்து விடப்படும் தண்ணீர், பவானி ஆற்றில், நெல்லித்துறை, பத்ரகாளியம்மன் கோவில், வெல்ஸ்புரம், மேட்டுப்பாளையம், ஓடந்துறை, சிக்கதாசம்பாளையம்,
 பவானி வெள்ளப்பெருக்கு: சங்கொலி முழக்க ஆய்வு

மேட்டுப்பாளையம்:பவானி ஆற்றில், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை பொதுமக்களுக்கு அறிவிக்கும் விதத்தில், எச்சரிக்கை சங்குகள் அமைப்பதற்கான இடங்களை, கோவை வடக்கு ஆர்.டி.ஒ., ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.பில்லுார் அணையில் இருந்து, திறந்து விடப்படும் தண்ணீர், பவானி ஆற்றில், நெல்லித்துறை, பத்ரகாளியம்மன் கோவில், வெல்ஸ்புரம், மேட்டுப்பாளையம், ஓடந்துறை, சிக்கதாசம்பாளையம், ஜடையம்பாளையம், சிறுமுகை ஆகிய ஊர்களின் வழியாக பவானிசாகர் அணைக்கு செல்கிறது.பில்லுார் அணை நிரம்பும்போது, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். மேலும், மின்உற்பத்திக்காக, தண்ணீர் திறக்கும்போது, பவானி ஆற்றில், திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும்.பவானி ஆற்றில், நீர் வரத்து குறைவாக இருக்கும்போது, மக்கள், ஆற்றின் நடுப்பகுதிக்குச் சென்று குளிக்கவும், துணி துவைக்கவும் செய்வர். மின் உற்பத்திக்காக, நீர் திறக்கப்பட்டால், நடு ஆற்றில் இருக்கும் பொதுமக்கள், கரைக்கு வருவதற்குள், ஆற்றில் அடித்துச் செல்லப்படுகின்றனர். அல்லது, ஆற்றின் நடுவில் சிக்கிக் கொள்கின்றனர்.ஆற்றில் தண்ணீர் அதிகளவில் வரும்போது, பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதத்தில், சங்கொலி எழுப்ப வேண்டும் என, கலெக்டர் சமீரன் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, கோவை வடக்கு ஆர்.டி.ஒ., ரவிச்சந்திரன், மேட்டுப்பாளையம் தாசில்தார் ஷர்மிளா, நகராட்சி கமிஷனர் வினோத், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பரமேஸ்வரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள், பவானி ஆற்றின் கரையோரத்தில் ஆய்வில் ஈடுபட்டனர்.நெல்லித்துறை ஊராட்சியில் உள்ள விளாமரத்துார், பத்ரகாளியம்மன் கோவில், வெல்ஸ்புரத்தில் உள்ள கதவணை, நகராட்சி நீரேற்று நிலையம், பவானி ஆற்றுப் பாலம் ஆகிய ஐந்து இடங்களில், ஆய்வு நடந்தது.ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் கூறுகையில்,"பவானி வெள்ளப்பெருக்கு குறித்து எச்சரிக்கை செய்ய, சங்குகளை நிறுவும் இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி, அனுமதி கிடைத்தவுடன், எச்சரிக்கை சங்குகள் அமைக்கப்படும்," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X