பொது செய்தி

தமிழ்நாடு

காலாவதி சீசன் டிக்கெட்டை மீண்டும் பயன்படுத்தலாம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
சென்னை : கொரோனா ஊரடங்கால், புறநகர் ரயிலில் பயணிக்காமலே காலக்கெடு முடிந்த மாதாந்திர சீசன் டிக்கெட்டை, மீண்டும் பயன்படுத்தலாம் என, ரயில்வே அறிவித்துள்ளது.கொரோனா ஊரடங்கால், 2020 மார்ச், 24 முதல் சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. இந்த ரயில்களில், மாதாந்திர சீசன் டிக்கெட் எடுத்தவர்கள், பயணம் செய்யாமலே, பயண காலக்கெடு காலாவதியாகிவிட்டது.ஊரடங்கு

சென்னை : கொரோனா ஊரடங்கால், புறநகர் ரயிலில் பயணிக்காமலே காலக்கெடு முடிந்த மாதாந்திர சீசன் டிக்கெட்டை, மீண்டும் பயன்படுத்தலாம் என, ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால், 2020 மார்ச், 24 முதல் சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. இந்த ரயில்களில், மாதாந்திர சீசன் டிக்கெட் எடுத்தவர்கள், பயணம் செய்யாமலே, பயண காலக்கெடு காலாவதியாகிவிட்டது.ஊரடங்கு தளர்வுக்குப் பின், ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கப்பட்டபோது, மாதாந்திர சீசன் டிக்கெட் பொது பயணியருக்கு வழங்கப்படவில்லை.

மாதாந்திர சீசன் டிக்கெட்டில் பயன்படுத்தாத நாட்களை, மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. இதனால், பயணியருக்கு கட்டண இழப்பு ஏற்பட்டது. தற்போது, மீண்டும் ரயில் போக்குவரத்து முழு வீச்சில் வேகமெடுத்துள்ளதால், 2020 மார்ச், 24க்கு முன், மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கி பயணம் செய்ய வேண்டிய நாட்கள் பாக்கி இருந்தால், எத்தனை நாட்கள் பயணம் செய்யவில்லையோ அத்தனை நாட்கள் தற்போது பயணம் செய்யலாம் என, ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X