நம்மூரு தின்பண்டத்துல எல்லா சத்தும் இருக்குங்க! ஊட்டச்சத்து விழாவில் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நம்மூரு தின்பண்டத்துல எல்லா சத்தும் இருக்குங்க! ஊட்டச்சத்து விழாவில் தகவல்

Added : செப் 04, 2021
Share
சூலுார்;உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க, கடலை உருண்டை, எள் உருண்டை சாப்பிடுங்க என, ஊட்டச்சத்து மாத விழாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், செப்., 1 முதல் 'போஷான் அபியான்' எனும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா துவங்கியுள்ளது.அங்கன்வாடி மையங்களில் காய்கறி தோட்டம் அமைத்தல், சிறு தானியங்களில் ஊட்டச்சத்து
 நம்மூரு தின்பண்டத்துல எல்லா சத்தும் இருக்குங்க! ஊட்டச்சத்து விழாவில் தகவல்

சூலுார்;உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க, கடலை உருண்டை, எள் உருண்டை சாப்பிடுங்க என, ஊட்டச்சத்து மாத விழாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், செப்., 1 முதல் 'போஷான் அபியான்' எனும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா துவங்கியுள்ளது.அங்கன்வாடி மையங்களில் காய்கறி தோட்டம் அமைத்தல், சிறு தானியங்களில் ஊட்டச்சத்து உணவு பொருட்கள் தயாரித்தல், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், பாலுாட்டும் இளம் தாய்மார்கள், வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், சூலுார் வட்டாரத்தில் நடத்தப்படுகின்றன. இதுகுறித்து சூலுார் வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சம்யுக்தா கூறியதாவது:சூலுார் வட்டாரத்தில் உள்ள, 123 அங்கன்வாடி மையங்களில், வீட்டு தோட்டம் அமைக்கும் பணி நடக்கிறது.அரசூர் ஊராட்சியில்,' ஆரோக்கியமான வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம்' என்னும் தலைப்பில், ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவு பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெட்டிக்கடை திறக்கப்பட்டது. இக்கடையில், உடலுக்கு உறுதி தரும் எள் உருண்டை, கடலை மிட்டாய், கீரை வகைகள், முட்டை உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு, வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள், இளம் தாய்மார்கள், குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X