பொது செய்தி

தமிழ்நாடு

மலைவாழ் மக்களுக்கு தடுப்பூசி

Added : செப் 04, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டில் காந்தவயல், காந்தையூர், மொக்கை மேடு, உளியூர் ஆகிய கிராமங்கள் உள்ளன.காந்தை ஆற்றில் தண்ணீர் அதிகளவில் தேங்கியுள்ளதால், இக்கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள், தடுப்பூசி போட முடியாத நிலை, இருந்து வந்தது. இதையடுத்து, சிறுமுகை வனச்சரக அலுவலர் செந்தில்குமார், மலைவாழ் மக்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு

மேட்டுப்பாளையம்:சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டில் காந்தவயல், காந்தையூர், மொக்கை மேடு, உளியூர் ஆகிய கிராமங்கள் உள்ளன.காந்தை ஆற்றில் தண்ணீர் அதிகளவில் தேங்கியுள்ளதால், இக்கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள், தடுப்பூசி போட முடியாத நிலை, இருந்து வந்தது. இதையடுத்து, சிறுமுகை வனச்சரக அலுவலர் செந்தில்குமார், மலைவாழ் மக்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்தார்.மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கத்தினர், ஹரிஹரன் மருத்துவமனை, சுப மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர் இணைந்து, காந்தவயல், உளியூர், மொக்கை மேடு ஆகிய, 3 கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைத்தனர்.டாக்டர் ஹரிஹரன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஸ்டீபன், மகாலிங்கம் ஆகியோர், முகாமில் மக்களுக்கு ஊசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இந்த நான்கு கிராமங்களில் மொத்தமாக, 460 மலைவாழ் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X