பொது செய்தி

தமிழ்நாடு

பவானி ஆற்றில் தண்ணீர்; விவசாயிகள் கண்ணீர்!

Added : செப் 04, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்,:பவானிசாகர் அணையில், 100 அடிக்கு மேல் தண்ணீர், தேக்கப்பட்டுள்ளதால், கரையோரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள, பல எக்டேர் பரப்பு வாழைகள் நீரில் மூழ்கின.பவானிசாகர் அணையின் நீர்மட்ட உயரம், 105 அடி. அணையின் பாதுகாப்பு கருதி, 103 அடி வரை மட்டுமே நீர் தேக்கப்படுகிறது. அதற்கு மேல் அணைக்கு வருகின்ற தண்ணீர், அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.அணையில், 100
 பவானி ஆற்றில் தண்ணீர்; விவசாயிகள் கண்ணீர்!

மேட்டுப்பாளையம்,:பவானிசாகர் அணையில், 100 அடிக்கு மேல் தண்ணீர், தேக்கப்பட்டுள்ளதால், கரையோரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள, பல எக்டேர் பரப்பு வாழைகள் நீரில் மூழ்கின.பவானிசாகர் அணையின் நீர்மட்ட உயரம், 105 அடி. அணையின் பாதுகாப்பு கருதி, 103 அடி வரை மட்டுமே நீர் தேக்கப்படுகிறது. அதற்கு மேல் அணைக்கு வருகின்ற தண்ணீர், அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.அணையில், 100 அடிக்கு மேல், தண்ணீர் தேக்கும்பொழுது, சிறுமுகை அடுத்த ஆலாங்கொம்பு வரை, நீர் தேங்கி நிற்கும். அணையில், 80 அடிக்கு குறைவாக தண்ணீர் இருந்தால், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் காலியாக இருக்கும். அந்த நிலங்களில் விவசாயிகள், வாழை, காய்கறி செடிகள் பயிர் செய்வர்.கடந்த சில மாதங்களுக்கு முன், அணை நீர்மட்டம், 80 அடியாக இருந்தது. அப்போது, காலியாக இருந்த நிலத்தில் விவசாயிகள் வாழைகள் பயிர் செய்தனர். அந்த வாழைகள், இன்னும் இரு மாதங்களில் தார் அறுவடை செய்யும் நிலையில் இருந்தன.கடந்த மாதம் பெய்த தென்மேற்கு பருவமழையால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகளவில் வந்தது. ஒரு மாதத்தில் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து, 102 அடிக்கும் எட்டியது. இதனால் அணையின் நீர்தேக்க பகுதியில் பயிர் செய்திருந்த, லட்சக்கணக்கான வாழை மரங்கள்தண்ணீரில் மூழ்கின. இதுகுறித்து லிங்காபுரம் பகுதி விவசாயிகள் கூறியதாவது:இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஓரளவு பெய்ததால், பவானிசாகர் அணை நிரம்பியது. இதனால், அணையின் நீர்தேக்க பகுதியில், பயிர் செய்துள்ள, பல லட்சம் வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அணையில் தண்ணீர் கிடுகிடுவென உயர்ந்ததால், பாதி முற்றிய நிலையில் உள்ள வாழைத்தார்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.இதனால், இப்பகுதியில் பயிர் செய்திருந்த அனைத்து விவசாயிகளுக்கும், பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, கருணை அடிப்படையில், இழப்பீட்டுத் தொகை வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X