தமிழ்நாடு

25 நீர்நிலைகளை மேம்படுத்தும் பணிகள் துவக்கம்! கொசஸ்தலை வடிகால் பணிகளும் வேகம்

Added : செப் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : சென்னையில், கொசஸ்தலை ஆறு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள், 768 கி.மீ., நீளத்துக்கு, 3,220 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகின்றன. இதேபோல், 25 நீர்நிலைகள், 200 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் நடவடிக்கைகளும் துவக்கப்பட்டு உள்ளன. இதற்கான ஆயத்த பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, இவற்றில் கழிவு நீர் கலப்பதையும், குப்பை கொட்டப் படுவதையும்
25 நீர்நிலைகளை மேம்படுத்தும் பணிகள் துவக்கம்! கொசஸ்தலை வடிகால் பணிகளும் வேகம்

சென்னை : சென்னையில், கொசஸ்தலை ஆறு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள், 768 கி.மீ., நீளத்துக்கு, 3,220 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகின்றன. இதேபோல், 25 நீர்நிலைகள், 200 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் நடவடிக்கைகளும் துவக்கப்பட்டு உள்ளன. இதற்கான ஆயத்த பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, இவற்றில் கழிவு நீர் கலப்பதையும், குப்பை கொட்டப் படுவதையும் முழுமையாக தடுக்க உத்தரவிட்டார்.

சென்னையில், கூவம், அடையாறு வடிகால் பகுதிகளில், ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில், இணைப்புகள் விடுபட்ட பகுதிகளில், 120 கோடி ரூபாய் செலவில், மழை நீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது.தொடர்ந்து, கொற்றலை ஆறு வடிநில பகுதியில், ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால், 768 கி.மீ., நீளத்தில், 3,220 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகின்றன.ஆசிய வளர்ச்சி வங்கி நிதியின் கீழ், 40 தொகுப்புகளாக பணிகள் நடைபெறுகின்றன.

இந்த வடிகால் அமைக்கும் பணிகளால், அம்பத்துார், மணலி, மாதவரம், திருவொற்றியூர் பகுதிகளில் வாழும், 30 லட்சம் பேர் பயனடைய உள்ளனர்.அதேபோல், கோவளம் வடிநில பகுதியில், ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் கட்டமைப்புகள், 1,714 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளன. இத்திட்டத்தால், பெருங்குடி, சோழிங்கநல்லுார், ஆலந்துார் பகுதிகளில் வாழும், ஒன்பது லட்சம் மக்கள் பயனடைவர்.கொற்றலை ஆறு ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள், பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

இதில், அம்பத்துார், பானு நகர், புழல், கதிர்வேடு ஆகிய பகுதிகளில் நடைபெறும் மழை நீர் வடிகால் பணியை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை, உரிய தரத்துடன் விரைந்து முடிக்குமாறு, ஒப்பந்ததாரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.


நீர்நிலைகள்


சென்னை மாநகராட்சியில், ஆக்கிரமிப்பு, பழுதடைந்து காணப்பட்ட, 210 நீர்நிலைகள் கண்டறியப்பட்டு மறு சீரமைக்கப்பட்டது. இதன் வாயிலாக, சென்னையில் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்தது. இதை தவிர, பழுதடைந்து காணப்பட்ட, 15 நீர்நிலைகளை மாநகராட்சி அடையாளம் கண்டுள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக சீரமைக்கப்பட்ட பட்டரவாக்கத்தில், 3.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள, பெரிய குளத்தையும் கமிஷனர் ஆய்வு செய்தார்.அப்போது, குளத்தின் சுற்றுச்சுவர், நடைபாதை, பூங்கா உள்ளிட்ட பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்ததுடன், ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்பட்டதா என்பதையும், அதிகாரிகளிடமும் கேட்டறிந்தார். குளத்தின் கரைகளை பலப்படுத்தும் வகையில், மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார்.


கமிஷனர் அளித்த பேட்டி:


சென்னை மாநகராட்சியில் உள்ள, 25 நீர்நிலைகள், 200 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட உள்ளன. அதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நீர்நிலைகளை சுற்றி, நிழல் தரும் மரங்கள் வளர்க்கப்படும்.அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். நீதிமன்ற வழக்குகள் இருந்தால், தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

நீர்நிலைகளில் குப்பை கொட்டுவது, கழிவு நீர் விடுவது போன்ற செயல்கள் முழுமையாக தடுக்கப்பட வேண்டும். அதற்காக, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்போது, பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
04-செப்-202109:42:25 IST Report Abuse
Manian ஹையா, எத்தனை கோடி மாமூல் இறைவா, எனக்கு மட்டும் எத்தனை கோடி மாமூல் இறைவா? - திருடர்கள் களக திரு மாமூலர், வடிகால் மாமூல் பிரிவு உப-மந்திரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X