பொது செய்தி

தமிழ்நாடு

கம்பு சாகுபடியில் அதிக லாபம் பெறலாம்: வேளாண்துறை அறிவுரை

Added : செப் 04, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்;தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின், தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, கம்பு சாகுபடியில் அதிக லாபம் பெறலாம் என, வேளாண் துறை, விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.தமிழகத்தில் நெல், சோளத்துக்கு அடுத்ததாக பயிரிடப்படும் உணவு பயிர் கம்பு. குறைந்த நீர்வளம், மண் வளம் உள்ள இடங்களிலும், செழித்து வளரக்கூடியது.சந்தையில் அதிக வரவேற்கப்படும் இந்த கம்பை பயிரிடுவதால்,

பெ.நா.பாளையம்;தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின், தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, கம்பு சாகுபடியில் அதிக லாபம் பெறலாம் என, வேளாண் துறை, விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.தமிழகத்தில் நெல், சோளத்துக்கு அடுத்ததாக பயிரிடப்படும் உணவு பயிர் கம்பு. குறைந்த நீர்வளம், மண் வளம் உள்ள இடங்களிலும், செழித்து வளரக்கூடியது.சந்தையில் அதிக வரவேற்கப்படும் இந்த கம்பை பயிரிடுவதால், அதிக லாபம் பெறலாம்.விதை நேர்த்திஏக்கருக்கு, 5 கிலோ விதை தேவைப்படும். ஒரு கிலோ விதையுடன், மெட்டாலாக்சில் ஆறு கிராம் என்ற விகிதத்தில் விதைப்பதற்கு, 24 மணி நேரத்திற்கு முன்னதாக, நேர்த்தி செய்ய வேண்டும். அல்லது விதைப்பதற்கு சற்று முன்பு அசோஸ்பைரில்லம் கலந்து, விதைக்க வேண்டும்.மானாவாரியில், 12.5 டன் ஒரு எக்டருக்கு தழைச்சத்து, 70 கிலோ, மணிச்சத்து, 20 கிலோ அனைத்தும் அடி உரமாக இட வேண்டும்.பொதுவாக 15வது, 30வது நாட்களில் களை எடுக்க வேண்டும். ஏழு முதல், 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.நோய்க் கட்டுப்பாடுகுருத்து ஈக்களை கட்டுப்படுத்த, 5 சதவீத வேப்பங்கொட்டை சாறு தெளிக்க வேண்டும். கதிர் நாவாய் பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க, 750 கிராம் கார்பரில், 5 சதவித மாலத்தியான் ஆகியவற்றை, பூ எடுக்கும் சமயத்தில் துாவ வேண்டும்.அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த, ஒரு ஏக்கருக்கு, 500 கிராம் மெட்டலாக்சில் அல்லது ஒரு கிலோ மென்கோசிப், 500 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். துரு நோயைக் கட்டுப்படுத்த, ஏக்கருக்கு நனையும் கந்தகம், 2.5 கிலோ அல்லது மென்கோசிப் ஒரு கிலோ தெளிக்க வேண்டும்.அறுவடைஇலைகள் மஞ்சள் நிறமாக மாறி, காய்ந்த தோற்றத்தைத் தரும். தானியங்கள் கடினமாகும். அப்போது, கதிர்களை தனியாக அறுவடை செய்ய வேண்டும். ஒரு வாரம் கழித்து தட்டையை வெட்டி, நன்கு காய வைத்த பின்னர், சேமித்து வைக்கவேண்டும்.தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் வாயிலாக, கம்பை பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும், என, பெரியநாயக்கன்பாளையம் வேளாண் அலுவலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X