தொழிலாளர் குடும்பத்திற்கு நிதி உதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் குடும்பத்திற்கு நிதி உதவி

Added : செப் 04, 2021
Share
திருவள்ளூர் : கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவுபெற்று, கொரோனா தொற்றால் பலியானோருக்கு, சிறப்பு நிதி உதவி வழங்கப்பட உள்ளது.திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழக கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள், கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு, சிறப்பு நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு

திருவள்ளூர் : கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவுபெற்று, கொரோனா தொற்றால் பலியானோருக்கு, சிறப்பு நிதி உதவி வழங்கப்பட உள்ளது.

திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழக கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள், கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு, சிறப்பு நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்துார்,மதுரவாயல், ஊத்துக்கோட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை வட்டங்களைச் சேர்ந்தவர்கள், திருவள்ளூர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர், மாதவரம் வட்டத்தைச் சேர்ந்தோர், பொன்னேரி, தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X