சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழையால் இடிந்தது கூரை

Added : செப் 04, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே மழைக்கு கூரை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை.துடியலுார், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் முதல், பகல் மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.கோவை, மேட்டுப்பாளையம் ரோடு, ஜி.என். மில்ஸ் பிரிவு அருகே உருமாண்டம்பாளையம்உள்ளது.இங்கு வசிப்பவர்முருகன், 58.
 மழையால் இடிந்தது கூரை

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே மழைக்கு கூரை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை.துடியலுார், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் முதல், பகல் மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.கோவை, மேட்டுப்பாளையம் ரோடு, ஜி.என். மில்ஸ் பிரிவு அருகே உருமாண்டம்பாளையம்உள்ளது.இங்கு வசிப்பவர்முருகன், 58. மாற்றுத்திறனாளியான இவர் செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ரங்கம்மாள்,50. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். அனைவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.நேற்று காலை, 7:00 மணி அளவில் குடும்பத்தினர் அனைவரும், வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டு கூரை மற்றும் சுவர் இடிந்து விழுந்தது.குடும்பத்தினர் வெளியே நின்று கொண்டிருந்ததால், உயிர்சேதம் இல்லை. வீட்டிலிருந்த பொருட்கள் உடைந்து சேதமடைந்தன.மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறனாளியின் குடும்பத்துக்கு உதவ வேண்டுமென, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X