சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளைஞர் துாக்கிட்டு தற்கொலை?

Added : செப் 04, 2021
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் அருகே செலையனுாரில், இளைஞர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா என, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஸ்ரீபெரும்புதுார் அருகே, மாம்பாக்கம் ஊராட்சி செலையனுார் அரசு தொடக்கப் பள்ளியின் பின்புறமுள்ள ஒரு மாமரத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கருணாகரன் மகன் வேணுகோபால், 20, என்பவர், துாக்கிட்ட நிலையில் இறந்து தொங்கினார்.தகவலறிந்து

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் அருகே செலையனுாரில், இளைஞர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா என, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் அருகே, மாம்பாக்கம் ஊராட்சி செலையனுார் அரசு தொடக்கப் பள்ளியின் பின்புறமுள்ள ஒரு மாமரத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கருணாகரன் மகன் வேணுகோபால், 20, என்பவர், துாக்கிட்ட நிலையில் இறந்து தொங்கினார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஸ்ரீபெரும்புதுார் போலீசார், இளைஞர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வேணுகோபாலும், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இரு குடும்பத்தினருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து வேணுகோபால், தன் குடும்பத்துடன் சுங்குவார்சத்திரம் அருகே மொளச்சூர் கிராமத்தில், ஆறு மாதங்களுக்கு முன் வாடகை வீட்டில் குடியேறினார்.

காதல் தோல்வி மற்றும் வேலைக்கு செல்லாமல் இருந்த வேணுகோபால் மன உளைச்சல் காரணமாக, செலையனுார் வந்து துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறுகாரணமா என, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X