இப்படி ஓர் ஊர் இங்க இல்லையே? ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு...| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இப்படி ஓர் ஊர் இங்க இல்லையே? ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு...

Added : செப் 04, 2021
Share
அன்னுார்:தடுப்பூசி முகாம் நடக்கும் ஊர்களின் பெயரை தவறாக வெளியிட்டு, மக்களை தலைசுற்ற வைக்கிறது மாவட்ட நிர்வாகம்.அன்னுார் ஒன்றியத்தில், தினமும் சராசரியாக, ஆறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடக்கின்றன. மாவட்ட நிர்வாகம் சார்பில், தடுப்பூசி முகாம் நடக்கும் வட்டாரத்தின் பெயரும், அந்த வட்டாரத்தில் உள்ள கிராமத்தின் பெயரும் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.இதில்,

அன்னுார்:தடுப்பூசி முகாம் நடக்கும் ஊர்களின் பெயரை தவறாக வெளியிட்டு, மக்களை தலைசுற்ற வைக்கிறது மாவட்ட நிர்வாகம்.அன்னுார் ஒன்றியத்தில், தினமும் சராசரியாக, ஆறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடக்கின்றன. மாவட்ட நிர்வாகம் சார்பில், தடுப்பூசி முகாம் நடக்கும் வட்டாரத்தின் பெயரும், அந்த வட்டாரத்தில் உள்ள கிராமத்தின் பெயரும் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.இதில், அன்னுார் வட்டாரத்தில் வெளியிடப்படும் ஊர்களின் பெயர் யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவு தவறுகளுடன் வெளியாகிறது.இரண்டு நாட்களுக்கு முன்பு, அன்னுார் வட்டாரத்தில் ஆறுமுகம்பாளையத்தில் தடுப்பூசி முகாம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.இந்த பெயரில் ஊரே இல்லாததால் மக்கள் அலை மோதினர். சுகாதாரத்துறையில் விசாரித்தபோது அருகம்பாளையம் என தெரியவந்தது.அதேபோல் முத்துக்கவுண்டன்புதுார் என குறிப்பிடப்பட்டிருந்தது. அன்னுார் ஒன்றியத்தில் அந்தப் பெயரில் ஊரே கிடையாது. விசாரித்த பிறகு, குமரகவுண்டன்புதுார் என, தெரிய வந்தது.அன்னுாரில், அரசு பள்ளியில் தடுப்பூசி போடுவதாக தெரிவிக்கப்பட்டது. அன்னுாரில் வடக்கு, தெற்கு என இரண்டு துவக்கப்பள்ளிகளும், இரண்டு கி.மீ., தொலைவில் அரசு மேல்நிலைப் பள்ளியும் உள்ளன,அரசு பள்ளி என்றதால், அரசு மேல்நிலைப் பள்ளி எனக் கருதி, மக்கள் அங்கு செல்கின்றனர். அதன்பிறகு துவக்கப்பள்ளி என்று தெரிந்த பிறகு, இரண்டு கி.மீ., திரும்பி வந்து, துவக்கப்பள்ளி முகாமுக்கு செல்கின்றனர்,அதேபோல் காரனுார், ஒட்டர்பாளையம், காரேகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல ஊர்களின் பெயர்களை, பிழைகளோடு இணையதளத்தில் வெளியிடுகின்றனர். இதனால், ஒவ்வொரு நாளும் சுகாதாரத்துறையிடம் கேட்டு, தெரிந்து கொண்டு, முகாமுக்குச் செல்ல வேண்டியுள்ளது.'சுகாதாரத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி முகாம் நடக்கும் ஊர்களின் பெயரை சரியாக வெளியிட வேண்டும்' என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X