பொது செய்தி

தமிழ்நாடு

நுாறு சதவிகிதம் தடுப்பூசி அத்திப்பாளையத்தில் முயற்சி

Added : செப் 04, 2021
Share
Advertisement
கோவில்பாளையம்:அத்திப்பாளையம் கிராமத்தில், 100 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி போடும் பணி நேற்று துவங்கியது.சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், அத்திபாளையம் கிராமத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு, இரண்டு நாள் முகாம், ரங்கநாதர் பாலிடெக்னிக் கல்லுாரியில், நேற்று துவங்கியது.வட்டார மருத்துவ அலுவலர் யக்ஞ பிரபா, துவக்கி வைத்தார்.நேற்று ஒரே நாளில், 450

கோவில்பாளையம்:அத்திப்பாளையம் கிராமத்தில், 100 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி போடும் பணி நேற்று துவங்கியது.சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், அத்திபாளையம் கிராமத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு, இரண்டு நாள் முகாம், ரங்கநாதர் பாலிடெக்னிக் கல்லுாரியில், நேற்று துவங்கியது.வட்டார மருத்துவ அலுவலர் யக்ஞ பிரபா, துவக்கி வைத்தார்.நேற்று ஒரே நாளில், 450 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு, உடனடியாக சான்றும் வழங்கப்பட்டது. மீதமுள்ள அனைவருக்கும் இன்று தடுப்பூசி போடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். 100 சதவீத இலக்கை எட்ட முத்துாஸ் மருத்துவமனை, கோயம்புத்துார் ஆதவன் லயன்ஸ் கிளப் ஆகியவை அத்திப்பாளையம் ஊராட்சியுடன் இணைந்து முகாமை ஏற்பாடு செய்திருந்தன.முகாமில், ஊராட்சி தலைவர் சுபத்ரா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தொற்று விபரம்நேற்று எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் ஒருவருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. 335 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. 890 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதுஅன்னுார் ஒன்றியத்தில், நேற்று 6 பேருக்கு தொற்று உறுதியானது; 135 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 1,700 தடுப்பூசி போடப்பட்டது.தடுப்பூசி வர தாமதமானதால், பொதுமக்கள் முகாம் நடக்கும் இடங்களில் நீண்ட நேரம் காத்திருந்து தடுப்பூசிபோட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X