பயிர் நாசமாவதால் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துங்கள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் நாசமாவதால் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துங்கள்

Added : செப் 04, 2021
Share
செங்கல்பட்டு, : செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மானிய திட்டங்கள் கையேடை, கலெக்டர் ராகுல்நாத் வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், வேளாண் இணை இயக்குனர் சுரேஷ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.தொடர்ந்து, கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:மோகன்:

செங்கல்பட்டு, : செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மானிய திட்டங்கள் கையேடை, கலெக்டர் ராகுல்நாத் வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், வேளாண் இணை இயக்குனர் சுரேஷ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.தொடர்ந்து, கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

மோகன்: மாவட்ட செயலர், தமிழ்நாடு விவசாய சங்கம்: செங்கல்பட்டு, புதுப்பாக்கம் இசா ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில், விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலத்தை வாங்கி, தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தோர் வீட்டுமனை அமைத்துள்ளனர். வீட்டுமனை பிரிவில் மண் கொட்டி வருகின்றனர். இதை தடுக்க வேண்டும்.

ராகுல்நாத், கலெக்டர்: மாவட்ட வருவாய் அலுவலர், வீட்டுமனை பிரிவுக்கு சென்று ஆய்வு செய்வார்.

ராஜா, மாவட்ட தலைவர் விவசாய சங்கம்: மதுராந்தகம் இ - சேவை மையத்தில், ஜாதி உள்ளிட்ட பல சான்றிதழ்கள் பெற, அதிகாலை 5:00 மணியிலிருந்து, பொதுமக்கள் காத்திருக்கின்றனர். தினமும் 30 டோக்கன் மட்டுமே வழங்கின்றனர். ஒரு டோக்கனுக்கு 100 ரூபாய் வசூல் செய்கின்றனர். ஏழைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

கெஜராஜன், நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் கிராமத்தில், கோவிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை, அ.தி.மு.க..,வைச் சேர்ந்தோர் விற்பனை செய்துள்ளனர். இந்த நிலத்தை மீட்க வேண்டும். கொண்டங்கி ஏரியை சீரமைக்க வேண்டும். ரேஷன் கடையில் இயந்திரம் பழுதாகி உள்ளதால், 30 பேர் மட்டுமே பொருட்கள் வாங்கி உள்ளனர்; மற்றவர்களால் வாங்க முடியவில்லை.

மேனுவல்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர்: ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்ய, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.கிருஷ்ணன், ஏரி நீர் பாசன தலைவர், பூதுார்: விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதை நிறுத்திவிட்டு, நெல்லுக்கு அதிகமாக விலை உயர்த்தி தர வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில், ஒரு மூட்டைக்கு 60 ரூபாய் வசூல் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். ஏழை விவசாயிகளுக்கு வீடு கட்டித்தர வேண்டும்.

கலெக்டர்: விவசாயிகளுக்கு வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

எம்.வெங்கடேசன், பொதுச் செயலர், அனைத்து விவசாய சாகுபடி பயிர்கள் உற்பத்தி விவசாய சங்கம்: கால்நடை மருத்துவர்கள், மருத்துவமனைகளில் தங்கி மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். நில அளவீடு செய்ய சர்வேயருக்கு, 5,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்கின்றனர். இதை தடுக்க வேண்டும். முரளிமோகன், செயலர், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாய சங்கம்: செங்கல்பட்டு மாவட்ட விவசாய நிலங்களில், நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை, காட்டுப்பன்றிகள் அழிக்கின்றன. இதை கட்டுப்படுத்தவில்லை என்றால், விவசாயம் செய்ய முடியதா சூழல் ஏற்படும்.

சத்தியமூர்த்தி, மாவட்ட வன அலுவலர்: காட்டுப்பன்றிகளால் பயிர்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இழப்பீடு வழங்கிறோம். காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X