பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடியினர் வீடுகள் தரமின்றி கட்டுமானம்: பிரச்னைக்கு தீர்வு காண முன்வராத அதிகாரிகள்

Added : செப் 04, 2021
Share
Advertisement
ஆனைமலை;ஆனைமலை, கல்லாங்குத்து பகுதியில் மூன்று ஆண்டுகளாகியும், 99 பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கிடைக்காமல் உள்ளதால், இன்னலுக்கு மத்தியில் வாழ்கின்றனர்.ஆனைமலை, தம்மம்பதி அருகிலுள்ள கல்லாங்குத்து கிராமத்தில், வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சி சார்பில், மூன்று ஆண்டுகளுக்கு முன், 99 பழங்குடியினருக்கு, அனைவருக்கும் வீடு திட்டத்தில், கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும்
 பழங்குடியினர் வீடுகள் தரமின்றி கட்டுமானம்: பிரச்னைக்கு தீர்வு காண முன்வராத அதிகாரிகள்

ஆனைமலை;ஆனைமலை, கல்லாங்குத்து பகுதியில் மூன்று ஆண்டுகளாகியும், 99 பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கிடைக்காமல் உள்ளதால், இன்னலுக்கு மத்தியில் வாழ்கின்றனர்.ஆனைமலை, தம்மம்பதி அருகிலுள்ள கல்லாங்குத்து கிராமத்தில், வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சி சார்பில், மூன்று ஆண்டுகளுக்கு முன், 99 பழங்குடியினருக்கு, அனைவருக்கும் வீடு திட்டத்தில், கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டம் துவங்கப்பட்டது.தனியார் சேவை அறக்கட்டளையினர், வீடுகள் கட்டிக்கொடுக்க உதவுவதாகக் கூறி, பழங்குடியினரிடம் தவணை தொகையை பெற்றுக்கொண்டு பணிகளை முடிக்காமல் இருந்தனர். பழங்குடியினர் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, கட்டுமான பணியின் தரம் சோதனை செய்யப்பட்டது. அதன்பின், பழங்குடியினர் தேர்வு செய்த தனியார் ஒப்பந்ததாரர்கள் வாயிலாக பணி துவங்கப்பட்டது.தற்போது, கட்டுமான பணிகள் நிறைவடையாமல் உள்ளன. பழங்குடியினர் தற்போதும் குடிசைகளில் இன்னலுக்கு மத்தியில் வாழ்கின்றனர்.தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட தலைவர் பரமசிவம் கூறியதாவது:பழங்குடியின மக்களிடம் ஆவணங்கள் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு வரும் தவணைத்தொகையை வாங்கிக்கொள்ளும் தனியார் கட்டட ஒப்பந்ததாரர்கள், கட்டுமான பணியை தரமான முறையில் மேற்கொள்வது இல்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம், ஆனைமலை தாசில்தாரிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. உயிருடன் விளையாடும் வகையில், தரமற்ற முறையில் கட்டுமான பணிகள் நடக்கிறது. வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் தலைமையில் தனிக்குழு அமைத்து, அவ்வப்போது கட்டுமான பணிகளின் தரத்தை சோதனை செய்ய வேண்டும். அல்லது, அரசே வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.வேட்டைக்காரன் புதுார் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் கூறியதாவது:பழங்குடியின இனத்தை சேர்ந்த, 99 பயனாளர்களில், பெரும்பாலானவர்களுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணை தொகை வழங்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவுப்படி பயனாளர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக தொகை வழங்கப் படுகிறது.கட்டுமான பணிகள் மேற்கொள்வது முற்றிலும் பயனாளிகளையே சார்ந்தது. அதனால், அவர்கள் தான், தரமான பணியை மேற்கொள்ள வேண்டும், தனியாரிடம் பணியை கொடுத்து விட்டு, கட்டுமானம் சரியில்லை என்பது ஏற்புடையதல்ல. இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X