பொது செய்தி

தமிழ்நாடு

பூச்சிகளை 'பொறி' வைத்து கட்டுப்படுத்தலாம்: பயிர்களை காக்க வேளாண் துறை ஆலோசனை

Added : செப் 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி;பயிர் சாகுபடியில் பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சி தாக்குதலை, ரசாயனமின்றி கவர்ச்சிப் பொறிகளை பயன்படுத்தி பெருமளவில் கட்டுப்படுத்தலாம், என, வேளாண் துறை தெரிவித்துள்ளது.பொள்ளாச்சியில் தென்னை மற்றும் காய்கறி சாகுபடி பெருமளவில் நடக்கிறது. தென்னையில் வண்டு வகைகள், வெள்ளை ஈ தாக்கம் பெரும் பிரச்னையாக உள்ளது. காய்கறி பயிர்களில் பூச்சி கட்டுப்பாட்டுக்காக

பொள்ளாச்சி;பயிர் சாகுபடியில் பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சி தாக்குதலை, ரசாயனமின்றி கவர்ச்சிப் பொறிகளை பயன்படுத்தி பெருமளவில் கட்டுப்படுத்தலாம், என, வேளாண் துறை தெரிவித்துள்ளது.பொள்ளாச்சியில் தென்னை மற்றும் காய்கறி சாகுபடி பெருமளவில் நடக்கிறது. தென்னையில் வண்டு வகைகள், வெள்ளை ஈ தாக்கம் பெரும் பிரச்னையாக உள்ளது. காய்கறி பயிர்களில் பூச்சி கட்டுப்பாட்டுக்காக பூச்சிக்கொல்லி பெருமளவில் பயன்படுத்துகின்றனர். இனக்கவர்ச்சிப் பொறிகளை பயன்படுத்துவது குறித்து, வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி கூறியதாவது:சில பூச்சிகளைக் கட்டுப்படுத்த மரபு வழி முறையை பயன்படுத்தலாம். உதாரணமாக காண்டாமிருக வண்டை கவர்ந்து இழுக்க கருவாட்டு பொறி, பழங்கள் மற்றும் பந்தல் காய்கறிகளை தாக்கும் பழ ஈக்களை அழிக்கும் பழ ஈ பொறிகளை பயன்படுத்தலாம்.சிறிய வகை பூச்சிகளை கட்டுப்படுத்த, மஞ்சள் மற்றும் நீல வண்ணத்தில் ஒட்டுப்பொறிகள் உதவுகின்றன. இந்நிறங்கள் பூச்சி வகைகளை கவர்ந்திழுத்து, வெள்ளை ஈக்கள், பச்சை வெட்டுக்கிளிகள் உள்ளிட்ட சிறிய வகை பூச்சிகளையும், அவற்றால் பரவும் வைரஸ் நோய்களையும் கட்டுப்படுத்தும்.இதன் அடிப்படையில், தென்னையை தாக்கும் ரூகோஸ் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, மஞ்சள் ஒட்டும் பொறி பரிந்துரைக்கப்படுகிறது. இனக்கவர்ச்சிப் பொறியில், வாசனை திரவத்தை பயன்படுத்தி ஆண் பூச்சிகளை கவர்ந்து அளிக்கலாம். காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன் வண்டு போன்றவற்றை கட்டுப்படுத்த வாளி வகை (பக்கெட்) பொறிகள் உதவுகின்றன. புனல் வகை பொறிகள் காய்கறிப் பயிர்களை தாக்கும் பூச்சிகளை, புழுக்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. குடுவை வகை கவர்ச்சி பொறிகள் பெரும்பாலும் பழத்தோட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன.விளக்குப் பொறிகள் அனைத்து விதமான பயிர்களில் நல்ல பலனை கொடுக்கும். பறக்கும் பூச்சிகள், குறிப்பாக தீமை செய்யும் பூச்சிகள் மாலை வேளையில் அதிகம் பறக்கும். அவற்றை வெளிச்சத்தினால் கவர்ந்து அழிக்க இவை உதவுகின்றன.இவை, பேட்டரி மற்றும் சோலார் சக்தியில் இயங்கும். தீமை செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மாலை, 6:00 முதல் இரவு, 9:30 மணி வரை மட்டுமே எரிய விட வேண்டும். அதற்கு மேல் பயன்படுத்தினால் நன்மை செய்யும் பூச்சிகளும் பாதிக்கப்படும்.மேலும் தகவல்களுக்கு, அந்தந்தப்பகுதி உதவி வேளாண் அலுவலர்களின் ஆலோனையை பெறலாம். இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X