தமிழ்நாடு

விவசாயிகள் நலனுக்கு உழவர் சந்தைகள் தயாராகிறது! அடிப்படை வசதி மேம்படுத்தும் பணி விறுவிறு

Added : செப் 04, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு : விவசாயிகளுக்கு பெரிதும் உபயோகமாக இருந்த, விளை பொருட்களை நேரடியாக விற்பதற்காக உருவாக்கப்பட்ட உழவர் சந்தைகளை மீண்டும் முழுவீச்சில் செயல்படுத்த, வேளாண் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திட்டத்தை, மீண்டும் முறையாக செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம்,

செங்கல்பட்டு : விவசாயிகளுக்கு பெரிதும் உபயோகமாக இருந்த, விளை பொருட்களை நேரடியாக விற்பதற்காக உருவாக்கப்பட்ட உழவர் சந்தைகளை மீண்டும் முழுவீச்சில் செயல்படுத்த, வேளாண் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திட்டத்தை, மீண்டும் முறையாக செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி, தாம்பரம், மேடவாக்கம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில், விவசாயிகள் நலனுக்காக உழவர் சந்தை திட்டத்தை, 2000ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார்.

செங்கல்பட்டில் அமைக்கப்பட்ட உழவர் சந்தையில், 60 கடைகள் ஏற்படுத்தப்பட்டன. இங்கு விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடைகள் ஒதுக்கப்பட்டன.விவசாயிகள் இலவசமாக காய்கறி விற்பனை செய்யவும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மாத வாடகை 1,000 ரூபாயிலும் கடைகள் ஒதுக்கப்பட்டன.ஆரம்பிக்கப்பட்ட புதிதில், விவசாயிகள் மற்றும் மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இதையடுத்து காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் எண்ணிக்கை குறைந்ததால், விவசாயிகள் கடை அமைப்பதை நிறுத்திவிட்டனர்.

கடந்த 10 ஆண்டுகளாக, அ.தி.மு.க., ஆட்சியில், உழவர் சந்தைகள் செயல்படாமல் முடங்கின. தற்போது பெயர் அளவிற்கு ஒரு சில கடைகள் மட்டும் செயல்படுகின்றன.விவசாயிகள் நலன் கருதி, தமிழக முதல்வர் ஸ்டாலின், உழவர் சந்தைகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளார். இனியாவது உழவர் சந்தைகள் முறையாக இயக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய உழவர் சந்தைகள் அமைப்பதற்கு, வேளாண் விற்பனை மற்றும் வணிக துறையினர், இடம் தேர்வு செய்யும் பணியை துவக்கி உள்ளனர்.அதிகாரிகளை நியமிக்கணும்!செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில், உழவர் சந்தையில், விவசாயிகள் காய்கறிகள் விற்பனை செய்ய, முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும். உழவர் சந்தைகளில், அடிப்படை வசதி ஏற்படுத்தவேண்டும்.

முறையாக இயங்குகிறதா என்பதை கண்காணிக்க விவசாயிகள் நலன்காக்கும், வேளாண் துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.கே.மேகநாதன் பொன்விளைந்தகளத்துார்நல்ல லாபம் உண்டுமாவட்டத்தில் உழவர் சந்தைகள் பல செயல்படாமல் உள்ளன. அதை திறந்தால், விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள், காய்கறிகள் விற்பனை செய்ய வசதியாக இருக்கும். விவசாயிகள் நேரடி விற்பனை செய்வ தால், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். உழவர் சந்தையை திறக்க வேண்டும்.

டி.ஹரிகிருஷ்ணன்சிதண்டி, செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒன்பது உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை இங்கு கொண்டு வந்து விற்க, விவசாயிகளுக்கு ஆலோசனை மற்றும் விதைகளை, வேளாண் துறையினர் வழங்கி வருகின்றனர். இவற்றை கவனிக்க, முழு நேரமாக, தலா ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். உழவர் சந்தைகளில் குடிநீர், கழிப்பறை, விவசாயிகள் மற்றும் மகளிர் குழுவினர் தங்குவற்கு ஓய்வு அறைகள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதில், பல்லாவரம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி உழவர் சந்தைகள், அனைத்து வசதிகளுடன் கூடிய, முன்மாதிரியாக மேம்படுத்த, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பல்லாவரம் உழவர் சந்தையில் 15 மகளிர் குழுவினருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள், சில தினங்களாக விற்பனை செய்து வருகின்றனர். உழவர் சந்தை தொடர்ந்து இயங்கினால் விவசாயிகள் மற்றும் மகளிர் குழுவினர் வாழ்வாதாரம் உயரும்.

சந்தேகங்களுக்கு 99407 60038 என்ற மொபைல் எண்ணை அழைக்கலாம்.எஸ்.ரவிகுமார்வேளாண் துறை துணை இயக்குனர், வேளாண் விற்பனை பிரிவு,செங்கல்பட்டு மாவட்டம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X