பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே கட்டடத்தில் மகப்பேறு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு ஆங்கர் ஸ்டோரி -

Added : செப் 04, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், 18 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஐந்து அடுக்கு மாடி மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு, பொது பயன்பாட்டுக்கு வந்தது.காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில், மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிகிச்சைக்கான வார்டு, தனித்தனியாக செயல்பட்டு வந்தது.அவர்களுக்கான வசதியை மேம்படுத்தும் வகையில், அனைத்து வசதிகளும் ஒரே

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், 18 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஐந்து அடுக்கு மாடி மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு, பொது பயன்பாட்டுக்கு வந்தது.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில், மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிகிச்சைக்கான வார்டு, தனித்தனியாக செயல்பட்டு வந்தது.அவர்களுக்கான வசதியை மேம்படுத்தும் வகையில், அனைத்து வசதிகளும் ஒரே கட்டடத்தில் இருக்கும் வகையில், புதிய கட்டமைப்பு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.ஒரே கட்டடம்இரு ஆண்டுகளுக்கு முன், புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசு நிதி ஒதுக்கியது.

மூன்று மாதங்களுக்கு முன் பணி முடிக்கப்பட்டதும், கொரோனா தொற்று சிகிச்சைக்காக திறக்கப்பட்டது.தற்போது, கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ள தால், புதிய கட்டடம் பொது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பழைய மகப்பேறு சிகிச்சை பிரிவில் இருந்து புதிய கட்டடத்திற்கு இடம் மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இனி பெண்களின் பேறுகாலம், குழந்தைகள் சிகிச்சை மற்றும் பேறுகாலத்திற்கான 'ஆப்பரேஷன் தியேட்டர்' அனைத்தும், புதிய கட்டடத்தில் இயங்கும் என, மருத்துவமனை அதிகாரி தெரிவித்தார்.

காஞ்சிபுரம் அரசு மருதத்துவமனை கண்காணிப்பாளர் பி.கல்பனா கூறியதாவது:புதிய கட்டடத்தில் மகப்பேறு ஆப்பரேஷன் தியேட்டர், குடும்ப கட்டுப்பாட்டு ஆப்பரேஷன் தியேட்டர், குழந்தைகள் சிகிச்சை பிரிவு என, அனைத்தும் ஒரே கட்டடத்தில் இயங்கும் வசதி உள்ளது.ரூ.2 கோடி உபகரணம்இனி தனித்தனியாக வார்டுகளுக்கு செல்ல வேண்டியதில்லை. அவசர சிகிச்சை மற்றும் உள்நோயாளிகளுக்கான வார்டு வசதி இருக்கும். குழந்தைகளுக்கான துரித சிகிச்சை மையம் புது கட்டடத்தில் செயல்படும்.

பழைய மகப்பேறு கட்டடத்தில் அரசு ஏற்கனவே அறிவித்துள்ள தாய் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை புற நோயாளிகள் பிரிவாக செயல்படும்.புதிய கட்டடத்திற்கான மொத்த நிதி 20 கோடியில், 18 கோடி ரூபாயில் கட்டடம் கட்டப்பட்டது. 2 கோடி ரூபாய், மருத்துவ உபகர ணங்கள் வாங்குவதற்கு ஒதுக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய கட்டடத்தில் உள்ள வசதிகள்

 தரை தளத்தில், பெண்களுக்கான புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு மற்றும் விபத்து சிகிச்சைக்கான வசதிகள் முதல் தளத்தில், பேறுகால பிரிவு மற்றும் அவசர சிகிச்சைக்கான அறுவை சிகிச்சை தியேட்டர். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்கள் தங்கும் பிரிவு. அவர்கள் குணமடைந்த பின் வரும் சாதாரண வார்டு இரண்டாவது தளத்தில், குடும்ப நல அறுவை சிகிச்சை, பெண்களுக்கான கர்ப்பப் பை ஆப்பரேஷன், அதற்கான சிகிச்சை பிரிவு மூன்றாவது தளத்தில் குடும்ப நலம் சம்பந்தப் பட்டவை நான்காவது தளத்தில் குழந்தைகள் சிகிச்சைக்கான பிரிவு ஐந்தாவதில் மருத்துவமனையில் நடக்கும் கூட்டத்திற்கான அரங்கு வசதி. ஐந்து மாடிகளுக்கும் செல்லும் வகையில் மின் துாக்கி வசதி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X