பொது செய்தி

தமிழ்நாடு

அலுவலர்கள் புறக்கணிப்பதாக புகார்; கும்மிடிப்பூண்டி சேர்மன் ஆவேசம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி : ''ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் பங்கேற்காமல் தொடர்ந்து புறக்கணிப்பு செய்யும் சுற்றுச்சூழல் அலுவலர்கள் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படும்'' என, கும்மிடிப்பூண்டி சேர்மன் சிவக்குமார் தெரிவித்தார்.கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம், சேர்மன் சிவகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஒன்றிய அலுவலக செலவுகள், ஒப்பந்ததாரர் பதிவு,

கும்மிடிப்பூண்டி : ''ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் பங்கேற்காமல் தொடர்ந்து புறக்கணிப்பு செய்யும் சுற்றுச்சூழல் அலுவலர்கள் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படும்'' என, கும்மிடிப்பூண்டி சேர்மன் சிவக்குமார் தெரிவித்தார்.

கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம், சேர்மன் சிவகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஒன்றிய அலுவலக செலவுகள், ஒப்பந்ததாரர் பதிவு, தொழிற்சாலை அனுமதி ஆகியவை மீது, 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்கும் விதமாக, அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்பது வழக்கம்.

தொழிற்சாலை மாசுவால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதித்து வரும் நிலையில், கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம், கூட்டத்தில் பங்கேற்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டினர்.

அதற்கு சேர்மன், ''வேண்டுமென்றே புறக்கணிப்பு செய்யும், சுற்றுச்சூழல் அலுவலர்கள் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்கப்படும்,'' என தெரிவித்தார்.இதையடுத்து, 'கிராம ஊராட்சி நிர்வாக செயல்பாடுகளை தெரிந்து கொள்ள, அந்தந்த ஒன்றிய கவுன்சிலர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். 'ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதலாக ஊழியர்கள் நியமிக்க வேண்டும். 'கிராமப்புறங்களுக்கு அரசு பஸ் வசதி வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை கவுன்சிலர்கள் முன் வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X