பொது செய்தி

தமிழ்நாடு

உலக தென்னை தினம் விவசாயிகள் பயிர் பாதுகாப்பு குறித்து அறிவுரை

Added : செப் 04, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, முத்துக்கவுண்டனுாரில், தென்னை தினம் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அனந்தகுமார் முன்னிலை வகித்தார். துணை இயக்குனர் ஷபி அகமது, மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்ட முகமை வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார்.உலக தென்னைகள் தினம் பற்றி பேசுகையில், ''கற்பக விருட்சமாக விளங்கும்
 உலக தென்னை தினம் விவசாயிகள் பயிர் பாதுகாப்பு குறித்து அறிவுரை

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, முத்துக்கவுண்டனுாரில், தென்னை தினம் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அனந்தகுமார் முன்னிலை வகித்தார். துணை இயக்குனர் ஷபி அகமது, மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்ட முகமை வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார்.உலக தென்னைகள் தினம் பற்றி பேசுகையில், ''கற்பக விருட்சமாக விளங்கும் தென்னையை பாதுகாக்க வேண்டும். தென்னை சாகுபடியை ஊக்குவிக்க தென்னையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து நன்கு தெரிந்து கொண்டு, செயல்படுத்த வேண்டும். தென்னை உற்பத்தி பொருள்களை மதிப்பு கூட்டி, விற்பனை செய்ய வேண்டும்,'' என்றார்.வேளாண் உதவி இயக்குனர் மீனாம்பிக்கை, நுண்ணீர் பாசனம் மற்றும் துணை நீர் மேலாண்மை குறித்தும், கால்நடை உதவி மருத்துவர் ரவிச்சந்திரன், கால்நடை வளர்ப்பு, சத்து குறைபாடு, கொடுக்க வேண்டிய அடர் தீவனம், தடுப்பூசி செலுத்துதல் குறித்தும் விளக்கினார்.தென்னைக்கு நுண்ணுாட்டம் இடும் முறைகள், டிரைக்கோடெர்மாவிரிடி மரத்துக்கு செலுத்தும் முறைகள் குறித்து, செயல்முறை விளக்கம் தரப்பட்டது.தொடர்ந்து, துணை வேளாண்மை அலுவலர் மோகனசுந்தரம், உதவி வேளாண் அலுவலர் தமிழரசன் ஆகியோர், தென்னை சாகுபடி குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். பெரும்பதி பசுமை தென்னை நிறுவன தலைவர் திருவேங்கடம் நன்றி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X