பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.ஏ.எஸ்.,சுக்காக தினமும் 16 மணி நேரம் படித்தேன்: கலெக்டர் ஆர்த்தி தன்னம்பிக்கை பேச்சு

Added : செப் 04, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : ''ஐ.ஏ.எஸ்., தேர்வுக்காக, தினமும் 16 மணி நேரம் படித்தேன்,'' என, அரசு தேர்வுக்கு படிக்கும் இளைஞர்களிடையே கலெக்டர் ஆர்த்தி பேசினார்.காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் எழுத, இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 'ஆன்லைன்' வாயிலாக நடந்த இந்த வகுப்புகள், தற்போது

காஞ்சிபுரம் : ''ஐ.ஏ.எஸ்., தேர்வுக்காக, தினமும் 16 மணி நேரம் படித்தேன்,'' என, அரசு தேர்வுக்கு படிக்கும் இளைஞர்களிடையே கலெக்டர் ஆர்த்தி பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் எழுத, இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 'ஆன்லைன்' வாயிலாக நடந்த இந்த வகுப்புகள், தற்போது நேரடியாக துவங்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள அறையில் நடக்கும் வகுப்பை, மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நேற்று துவக்கி வைத்தார்.

இளைஞர்களுக்கு, தேர்வு பற்றிய கையேடுகளை வழங்கிய அவர், பயிற்சி பெறுவோரின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார்.பயிற்சி வகுப்பில் கலெக்டர் ஆர்த்தி பேசியதாவது:

வாரந்தோறும் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்தில், 100க்கு 40 மனுக்கள் வேலை வேண்டும் என்ற கோரிக்கையாகவே வருகின்றன. அரசு வேலை என்பது, தற்போதைய சூழலில் தேர்வு மூலம் மட்டுமே கிடைக்கும். தேர்வுக்கு நீங்கள் தயாராக வேண்டும். இந்த பயிற்சிக்கு வந்து படிப்பதற்காகவே என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நானும் உங்களை போல, சில ஆண்டுகளுக்கு முன், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தேன்.

முதல் முயற்சியில் தோல்வியடைந்தேன். இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றேன். தோல்வியை கடந்து வெற்றி பெற முடியும். தேர்வுக்காக தினமும் 16 மணி நேரம் படித்தேன்.அதுபோல், நீங்களும் விடா முயற்சியுடன் படித்தால், நிச்சயம் அரசு பணி பெற முடியும். பெண்கள் பலர், நெருக்கடியான சூழலிலும் படிக்கின்றனர். நீங்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X