போலீஸ் டைரி

Added : செப் 04, 2021
Share
Advertisement
ஆற்றில் மூழ்கி மாணவன் பலிநகரி: சித்துார் மாவட்டம், நகரி நகராட்சி, சந்திரவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் மகன் விக்னேஷ், 16. பத்தாம் வகுப்பு முடித்து பிளஸ் 1 வகுப்பில் சேர காத்திருந்தார். நேற்று முன்தினம், சந்திரவாடா செல்லும் கொசஸ்தலை ஆற்றில் குளிப்பதற்கு தன் நண்பர்களுடன் சென்றார். விக்னேஷ் ஆற்றில் இறங்கியபோது அதிகளவில் வெள்ளம் வந்ததில், தண்ணீரில் அடித்து

ஆற்றில் மூழ்கி மாணவன் பலி

நகரி: சித்துார் மாவட்டம், நகரி நகராட்சி, சந்திரவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் மகன் விக்னேஷ், 16. பத்தாம் வகுப்பு முடித்து பிளஸ் 1 வகுப்பில் சேர காத்திருந்தார்.

நேற்று முன்தினம், சந்திரவாடா செல்லும் கொசஸ்தலை ஆற்றில் குளிப்பதற்கு தன் நண்பர்களுடன் சென்றார். விக்னேஷ் ஆற்றில் இறங்கியபோது அதிகளவில் வெள்ளம் வந்ததில், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். சிறிது துாரத்தில் மணல் திட்டில் சிக்கி விக்கேஷ் இறந்தார். நகரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பிணத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

22 செம்மரக்கட்டை பறிமுதல்

நகரி: சித்துார் மாவட்டம் புத்துார் - ரேணிகுண்டா சாலையில், வடமால்பேட்டை அடுத்த அந்தோரியம்மாள் கணவாய் அருகே, திருப்பதி அதிரடி போலீசார் வாகன சோதனை மேற்கொண்டார்.

அப்போது அவ்வழியாக வந்த வேனை நிறுத்தினர். அதிலிருந்தோர் தப்பியோட முயற்சித்தனர். அதிரடி போலீசார் சுற்றி வளைத்து, ஐந்து சிறுவர்கள் உட்பட, 20 - 35 வயது வரை உள்ள 16 பேரை கைது செய்தனர். இருந்த, 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 22 செம்மரங்கள், 12 மொபைல் போன், 10 ஆயிரம் ரூபாய் மற்றும் மரம் வெட்டும் உபகரணங்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா கடத்தியவர் சிக்கினார்

கும்மிடிப்பூண்டி: சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கீழ்முதலம்பேடு சந்திப்பில், கவரைப்பேட்டை போலீசார் நேற்று, வாகன சோதனை செய்தனர்.

அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி, பைக்கில் சென்ற நபரை நிறுத்தி, சோதனை மேற்கொண்டனர். அவரிடம், 2,500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.கஞ்சா கடத்திய அந்த நபர், புழல் அடுத்த காவாங்கரை பகுதியைச் சேர்ந்த ரமேஷ், 37, என்பது தெரியவந்தது. வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார் அவரை கைது செய்தனர்.

30 கஞ்சா பொட்டலம் பறிமுதல்

மணவாள நகர்: வெங்கத்துார் ஏரிக்கரை அருகே, மணவாள நகர் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அந்த வழியாக வந்த 'யமஹா எப்.இசட்.,' இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

வாகனத்தில் வந்த நபர்களிடமிருந்து, 240 கிராம் மதிப்புள்ள, 30 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், வெங்கத்துார் தினேஷ்குமார், 24, மற்றும் பிரபு, 20, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X