பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை ஆரோக்கியத்துக்கு சத்தான உணவே அவசியம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
வால்பாறை:குழந்தைகள் ஆரோக்கியமாக வளர, சத்தான உணவு வகைகளை கொடுங்க என, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும், அங்கன்வாடிகளில் ஆண்டுதோறும் செப்., மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்படுகிறது.வால்பாறை தாலுகாவில் மொத்தம், 42 அங்கன்வாடி மையங்களில், 685 குழந்தைகள் உள்ளனர். இந்த அங்கன்வாடிகளில்,
 குழந்தை ஆரோக்கியத்துக்கு சத்தான உணவே அவசியம்

வால்பாறை:குழந்தைகள் ஆரோக்கியமாக வளர, சத்தான உணவு வகைகளை கொடுங்க என, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும், அங்கன்வாடிகளில் ஆண்டுதோறும் செப்., மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்படுகிறது.வால்பாறை தாலுகாவில் மொத்தம், 42 அங்கன்வாடி மையங்களில், 685 குழந்தைகள் உள்ளனர். இந்த அங்கன்வாடிகளில், ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, திட்ட அலுவலர் சாந்தி தலைமையில் நடந்தது.திட்ட மேற்பார்வையாளர் நாகஜோதி பேசும்போது, ''குழந்தைகளுக்கு இளம் வயது முதல் சத்தான உணவு வழங்க வேண்டும். தாய்மார்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான், குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.பால், முட்டை, கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு, பழ வகைகளை குழந்தைகளுக்கு தினமும் கொடுக்க வேண்டும். குழந்தைகள் ஆரோக்கியத்துக்கு சத்தான உணவே அவசியம்.கொரோனா மூன்றாவது அலை நெருங்கும் நிலையில், பெற்றோர்கள் குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பாதுகாக்க வேண்டும்,'' என்றார்.நிகழ்ச்சியில், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X