தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி: போலீஸ் எச்சரிக்கை

Added : செப் 04, 2021
Share
Advertisement
திருத்தணி : பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அரசு விதித்துள்ள தடையை மீறுவோர் மீது நடவடிக்கை பாயும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.நாடு முழுதும், வரும் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. கொரோனா தொற்று காரணமாக, வீடுகளில் மட்டுமே வழிபடலாம்; பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது மற்றும் ஊர்வலம் நடத்துவதற்கு என, தமிழக அரசு தடை

திருத்தணி : பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அரசு விதித்துள்ள தடையை மீறுவோர் மீது நடவடிக்கை பாயும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.

நாடு முழுதும், வரும் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. கொரோனா தொற்று காரணமாக, வீடுகளில் மட்டுமே வழிபடலாம்; பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது மற்றும் ஊர்வலம் நடத்துவதற்கு என, தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் திருத்தணியில் காவல் துறையின் சார்பில், இந்து மக்கள் முன்னணி மற்றும் பா.ஜ., நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இதில், திருத்தணி இன்ஸ்பெக்டர் ரமேஷ், எஸ்.ஐ., கிருஷ்ணமராஜ் ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள், 'விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைத்து வழிப்படுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.'தவறும் பட்சத்தில் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அறிவுறுத்தினர்.

கூட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு, ஆந்திர மாநிலத்தில் இருந்து விநாயகர் சிலைகள் கொண்டு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, தமிழக - ஆந்திரா எல்லையான திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடியில் போலீசார், வாகனங்களை கண்காணித்து வருகின்றனர்.மாவட்ட எஸ்.பி., வருண்குமார் உத்தரவுப்படி, பொன்பாடி சோதனை சாவடியில் கூடுதல் போலீசார் நியமித்து கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X