குளத்தின் சுவர், பாதை சேதம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
வாலாஜாபாத் : அய்யன்பேட்டை மழை நீர் சேகரிப்பு குளத்தில் கட்டப்பட்ட கான்கிரீட் சுற்றுச்சுவர், 11 மாதங்களுக்குள் உடைந்து, அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது.காஞ்சிபுரம் அடுத்த, அய்யன்பேட்டை ஊராட்சி கிராம சேவை மைய கட்டடம் அருகே, கடந்த ஆண்டு, குடிமராமத்து திட்ட பணிகளின் கீழ், குளம் துார் வாரி ஆழப்படுத்தும் பணி நடந்தது.மேலும், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு

வாலாஜாபாத் : அய்யன்பேட்டை மழை நீர் சேகரிப்பு குளத்தில் கட்டப்பட்ட கான்கிரீட் சுற்றுச்சுவர், 11 மாதங்களுக்குள் உடைந்து, அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது.

காஞ்சிபுரம் அடுத்த, அய்யன்பேட்டை ஊராட்சி கிராம சேவை மைய கட்டடம் அருகே, கடந்த ஆண்டு, குடிமராமத்து திட்ட பணிகளின் கீழ், குளம் துார் வாரி ஆழப்படுத்தும் பணி நடந்தது.மேலும், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், மழை நீர் சேகரிப்பு குளத்தை சுற்றிலும், கான்கிரீட் தடுப்பு சுவர் மற்றும் 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்கப்பட்டன. திம்மையன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க., நிர்வாகி ஞானசேகர் என்பவர், கட்டுமான பணிகளை மேற்கொண்டார்.

இக்குளம், காஞ்சிபுரம் - வாலாஜாபாத் பிரதான சாலை ஓரத்திலும், குடியிருப்பு ஒட்டியும் இருப்பதால், பல தரப்பினரும் குளத்தில் தவறி விழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என, குளத்தை சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. குளம் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, 11 மாதத்திற்குள் கான்கிரீட் தடுப்பு சுவர் உடைந்து உள்வாங்கி உள்ளது. மேலும், பேவர் பிளாக் கரை கற்கள் சரிந்த நிலையில் காணப்படுகிறது. தரமில்லாத கட்டுமான பணிகள் குறித்து, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா கூறியதாவது:வாலாஜாபாத் வட்டாரத்திற்கு, புதிய பி.டி.ஓ.,வாக பொறுப்பு ஏற்று உள்ளேன். அய்யன்பேட்டையில் சேதமடைந்த குளத்தை ஆய்வு செய்ய உள்ளேன். அதில் குறைபாடுகள் இருந்து, அப்பணிக்கு பணம் விடுவிக்கப்படவில்லை எனில், 'பில்' தருவதை நிறுத்திவிடுகிறேன். பில் கொடுத்திருந்தால், ஒப்பந்ததாரரை அழைத்து, குளச்சரிவை சரி செய்ய அறிவுரை வழங்குவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X