பொது செய்தி

தமிழ்நாடு

ஆரணி ஆற்றுப்பாலம் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை தேவை

Added : செப் 04, 2021
Share
Advertisement
ஊத்துக்கோட்டை : ஆமை வேகத்தில் நடக்கும் உயர்மட்ட பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில், தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில், 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் அமைக்க, 2018ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது; பணிகள் நடந்து வருகின்றன.போக்குவரத்து வசதிக்காக, பாலம் அமைக்கும்

ஊத்துக்கோட்டை : ஆமை வேகத்தில் நடக்கும் உயர்மட்ட பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில், தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில், 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் அமைக்க, 2018ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது; பணிகள் நடந்து வருகின்றன.போக்குவரத்து வசதிக்காக, பாலம் அமைக்கும் இடத்தின் இடது பக்கம், தற்காலிக சாலை அமைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டிய பாலம் கட்டுமான பணி, மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், தற்காலிக சாலை அடித்து செல்லப்பட்டது. இரும்பு படிக்கட்டுகள் அமைத்து, போலீசார் தற்காலிகமாக சீரமைத்தனர்.வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில், பாலம் பணிகள் இன்னும் முடியாமல், தற்காலிக சாலையும் முறையாக இல்லாததால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

வாகன ஓட்டிகள் கூறியதாவது:மழைக்காலம் துவங்க உள்ள நிலையில், ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், போக்குவரத்து மீண்டும் பாதிக்கும். தற்போதுள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது.தொகுதி எம்.பி., - எம்.எல்.ஏ., ஆகியோர் நேரில் ஆய்வு செய்தும், பணிகள் முடிந்தபாடில்லை. பாலப்பணிகளை விரைவாக முடிக்க, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மின்கம்பம் மாற்றி அமைக்கும் பணி நிலுவையில் உள்ளது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி உள்ளோம். வரும் 30ம் தேதிக்குள் பாலப்பணி அனைத்தும் நிறைவடையும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X