தொடர் மழையால் சேறும், சகதியுமான ரோடுகள்

Added : செப் 04, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை பகுதிகளில், தொடர் மழை பெய்ததால், ரோடுகளில் மழை நீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது.உடுமலை பகுதிகளில், நேற்றுமுன்தினம் இரவு துவங்கிய மழை, நேற்று மதியம் வரை தொடர்ந்து பெய்து வந்தது.நேற்றுமுன்தினம் முதல், நேற்று காலை வரை, உடுமலையில், 3 மி.மீ., மழையும், அமராவதி அணைப்பகுதியில், 2 மி.மீ.,; மடத்துக்குளத்தில், 5 மி.மீ., திருமூர்த்தி அணைப்பகுதியில், 3 மி.மீ., மழை
 தொடர் மழையால் சேறும், சகதியுமான ரோடுகள்

உடுமலை:உடுமலை பகுதிகளில், தொடர் மழை பெய்ததால், ரோடுகளில் மழை நீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது.உடுமலை பகுதிகளில், நேற்றுமுன்தினம் இரவு துவங்கிய மழை, நேற்று மதியம் வரை தொடர்ந்து பெய்து வந்தது.நேற்றுமுன்தினம் முதல், நேற்று காலை வரை, உடுமலையில், 3 மி.மீ., மழையும், அமராவதி அணைப்பகுதியில், 2 மி.மீ.,; மடத்துக்குளத்தில், 5 மி.மீ., திருமூர்த்தி அணைப்பகுதியில், 3 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. உடுமலையில் தொடர் மழை பெய்து வந்த நிலையில், மழை நீர் வடிகால்கள் அடைப்பு காரணமாக, பழநி ரோடு, தளி ரோடு, தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு என பிரதான போக்குவரத்து ரோடுகளில் மழை நீர் தேங்கி, சேறும், சகதியுமாக மாறியது. இதனால், போக்குவரத்து பாதித்தது. மழை நீர் வடிகால்களை துார்வார நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாயிகள் மகிழ்ச்சிபொதுவாக தமிழகத்தில் மூன்று பருவ நிலைகளில், கரும்பு சாகுபடி நடப்பது வழக்கம். டிச., ஜன., மாதமும், அடுத்து பிப்., மார்ச் மாதமும், பின்பு ஏப்., மே ஆகிய மாதங்களில் கரும்பு நடவு செய்யப்படுகிறது.மடத்துக்குளம் பகுதியில், ஆண்டு தோறும் 1,500 ஏக்கருக்கும் கூடுதலாக கரும்பு சாகுபடி நடக்கிறது. அமராவதி அணையின் நீர் இருப்பை அடிப்படையாகக்கொண்டும், சர்க்கரை ஆலையின் அரவை மாதங்களில், அறுவடை செய்ய தகுந்தபடியும் நடப்பு பருவத்தில் பல நுாறு ஏக்கர் பரப்பில் சாகுபடி நடந்துள்ளது.விவசாயிகள் கூறுகையில், 'கரும்பு சாகுபடிக்கு பாசன நீர் மிக முக்கியமான ஒன்றாகும். தற்போது அமராவதி அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளதாலும், தொடர்ந்து மழை பெய்வதாலும் பாசன நீர் தட்டுப்பாடின்றி, கரும்பு பயிர் வளர்ச்சி ஆரோக்கியமாக உள்ளது." என தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X