பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களை அலைக்கழித்த அரசு பேருந்து ஓட்டுனர்

Added : செப் 04, 2021
Share
Advertisement
திருவாலங்காடு : திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடு குப்பத்தைச் சேர்ந்த ஐந்து பள்ளி மாணவர்கள், திருத்தணியில் பள்ளி முடிந்து, வீட்டுக்கு செல்வதற்காக, திருத்தணி -- பூந்தமல்லி செல்லும் தடம் எண்: 97 அரசு பேருந்தில் ஏறினர்.திருப்பதி -- சென்னை நெடுஞ்சாலையில் சென்றபோது, 'பேருந்து ஆற்காடுகுப்பம் கிராமத்திற்கு செல்லாது; இங்கேயே இறங்கி கொள்ளுங்கள்' என, ஐந்து மாணவர்களிடம் கூறி,

திருவாலங்காடு : திருவாலங்காடு ஒன்றியம், ஆற்காடு குப்பத்தைச் சேர்ந்த ஐந்து பள்ளி மாணவர்கள், திருத்தணியில் பள்ளி முடிந்து, வீட்டுக்கு செல்வதற்காக, திருத்தணி -- பூந்தமல்லி செல்லும் தடம் எண்: 97 அரசு பேருந்தில் ஏறினர்.

திருப்பதி -- சென்னை நெடுஞ்சாலையில் சென்றபோது, 'பேருந்து ஆற்காடுகுப்பம் கிராமத்திற்கு செல்லாது; இங்கேயே இறங்கி கொள்ளுங்கள்' என, ஐந்து மாணவர்களிடம் கூறி, பேருந்தை நெடுஞ்சாலையில் நிறுத்தினார்.அதற்கு மாணவர்கள், 'கிராமத்திற்குள் தானே பேருந்து செல்ல வேண்டும்' என கேள்வி கேட்டபோது, அதை கண்டுகொள்ளாத ஓட்டுனர், பேருந்தை இயக்கினார்.

மாணவர்கள் கூச்சலிட்டதை பார்த்து, சக பயணி ஒருவர், திருத்தணி பணிமனை கிளை மேலாளரை தொடர்பு கொண்டு நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து, ஓட்டுனரை தொடர்பு கொண்ட மேலாளர், 'மாணவர்களை ஆற்காடு குப்பம் பேருந்து நிலையத்தில் இறக்கி விடுங்கள்' என கூறியதையடுத்து, மாணவர்களை அவர்களின் கிராமத்தில் விட்டுச் சென்றனர்.

மாணவர்கள், 'வேண்டுமென்றே எங்களை, 8 கி.மீ., வரை அலைக்கழித்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது, போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை வைத்துள்ளனர்.

திருத்தணி பணிமனை கிளை மேலாளர் முத்துசாமி கூறுகையில், 'மாணவர்களை அலைக்கழித்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது, நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வரும் காலங்களில் இது போன்ற சம்பவம் நடக்காது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X