ஒரகடம் சிப்காட்டில் அமையுமா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒரகடம் 'சிப்காட்'டில் அமையுமா

Added : செப் 04, 2021
Share
ஒரகடம் : தொழிற்சாலை வாகனங்களை நிறுத்துவதற்கு, ஒரகடம் 'சிப்காட்'டில் கனரக வாகன நிறுத்த முனையம் அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் 'சிப்காட்' தொழிற்பூங்கா உள்ளது. இங்கு கார், மொபைல் போன், லாரி, இருசக்கர வாகன டயர் தயாரிக்கும்தொழிற்சாலைகள் என,120க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.இங்கு உற்பத்தி செய்ய தேவைப்படும்

ஒரகடம் : தொழிற்சாலை வாகனங்களை நிறுத்துவதற்கு, ஒரகடம் 'சிப்காட்'டில் கனரக வாகன நிறுத்த முனையம் அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் 'சிப்காட்' தொழிற்பூங்கா உள்ளது. இங்கு கார், மொபைல் போன், லாரி, இருசக்கர வாகன டயர் தயாரிக்கும்தொழிற்சாலைகள் என,120க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.இங்கு உற்பத்தி செய்ய தேவைப்படும் மூலப்பொருட்களை ஏற்றி வரவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றிச்செல்லவும், ஏராளமான கன்டெய்னர் லாரிகள் வருகின்றன.இவ்வாறு வரும் லாரிகள், பல்வேறு காரணங்களுக்காக 15 நாட்கள் வரை, ஒரகடம் 'சிப்காட்' பகுதியில் காத்திருக்க வேண்டியுள்ளது.

இந்த சிப்காட்டில் தொழிற்சாலை வாகனங்களை நிறுத்துவதற்கு என, தனியாக இடமில்லை.24 மணி நேரம்இதனால், 500க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள், சிங்கபெருமாள்கோவில்- - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை, வண்டலுார் - -வாலாஜாபாத் நெடுஞ்சாலையோரம், 24 மணி நேரமும் நிறுத்தப்படுகின்றன.இவை, போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதோடு, அவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கவும் காரணமாகின்றன.

ஒரகடம் சிப்காட்டில் தொழிற்சாலை வாகனங்களை நிறுத்துவதற்கென, வாகன நிறுத்த முனையம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இருங்காட்டுக்கோட்டை முன்னுதாரணம்

தொழிற்சாலைக்கு வரும் கனரக வாகனங்கள், நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படுவதால் ஏற்படும் விபத்தை தடுக்க, இருங்காட்டுக்கோட்டை 'சிப்காட்'டில் கனரக வாகனங்கள் நிறுத்த முனையம், நான்கு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இங்கு கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம், வாகன ஓட்டிகள் தங்குவதற்கு குடியிருப்பு, சமையல் அறை, கழிப்பறை, வணிக வளாகம் உள்ளிட்ட பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு ஏராளமான கன்டெய்னர் லாரிகளை நிறுத்தி, வாகன ஓட்டிகள் ஓய்வெடுத்து செல்கின்றனர். இது போன்ற கனரக வாகன போக்குவரத்து முனையத்தை, அனைத்து சிப்காட் தொழிற் பூங்காவிலும் ஏற்படுத்த வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X