பொது செய்தி

தமிழ்நாடு

திருமண மண்டபத்தில் 50 சதவீதம் மக்களை அனுமதிக்க வேண்டுகோள்

Added : செப் 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:'பொள்ளாச்சி தாலுகாவுக்கு உட்பட்ட திருமண மண்டபங்களில், 50 சதவீதம் மக்களை அனுமதி அளிக்க வேண்டும்,' என, மண்டப உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி வட்டார திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கத்தினர், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது: பொள்ளாச்சி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில், 100க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள்

பொள்ளாச்சி:'பொள்ளாச்சி தாலுகாவுக்கு உட்பட்ட திருமண மண்டபங்களில், 50 சதவீதம் மக்களை அனுமதி அளிக்க வேண்டும்,' என, மண்டப உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி வட்டார திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கத்தினர், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது: பொள்ளாச்சி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில், 100க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. கொரோனா காரணமாக கடந்த, ஒன்றரை ஆண்டுகளாக மண்டப உரிமையாளர்கள், இதனை சார்ந்துள்ள அனைத்து தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இழந்து பாதிப்பிக்கு உள்ளாகியுள்ளோம்.மாவட்ட நிர்வாகம், 50 பேருக்கு மிகாமல் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளித்துள்ளனர். திரையரங்கம், உணவு விடுதி போன்ற உள் அரங்குகளுக்கு, 50 சதவீதம் நபர்களை அனுமதிக்க அனுமதி அளித்துள்ளனர். அதை போன்று, திருமண மண்டபங்களில், 50 சதவீதம் பேர் அனுமதி அளித்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க வழி செய்ய வேண்டும். சொத்து, தொழில் வரி, வங்கி கடன்கள், மின் கட்டணம், ஊழியர்களின் சம்பளம் போன்றவற்றிற்கு கூட செலவிட முடியாத நிதிச்சுமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X