பொது செய்தி

தமிழ்நாடு

சொட்டுநீரில் தக்காளி சாகுபடி: மழை ஓய்ந்ததால் பணி தீவிரம்

Added : செப் 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சி விவசாயிகள், மழை ஓய்ந்துள்ளதால் சொட்டுநீர் பாசனம் அமைத்து, தக்காளி சாகுபடி செய்வதில் தீவிரம் காட்டுகின்றனர்.பொள்ளாச்சி பகுதியில், தக்காளி சாகுபடி அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. அதிக விளைச்சலுக்காக, வீரிய ஒட்டுரக கொடி வகை தக்காளி அதிகம் பயிரிடப்படுகிறது. இவ்வகை தக்காளி பயிரில், மழைக்காலத்தில் அழுகல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்கும். செடிகள்
 சொட்டுநீரில் தக்காளி சாகுபடி: மழை ஓய்ந்ததால் பணி தீவிரம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி விவசாயிகள், மழை ஓய்ந்துள்ளதால் சொட்டுநீர் பாசனம் அமைத்து, தக்காளி சாகுபடி செய்வதில் தீவிரம் காட்டுகின்றனர்.பொள்ளாச்சி பகுதியில், தக்காளி சாகுபடி அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. அதிக விளைச்சலுக்காக, வீரிய ஒட்டுரக கொடி வகை தக்காளி அதிகம் பயிரிடப்படுகிறது. இவ்வகை தக்காளி பயிரில், மழைக்காலத்தில் அழுகல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்கும். செடிகள் பழுத்து, கருத்து மடியும்.இதனால், மழைக்காலத்தில் தக்காளி சாகுபடியை விவசாயிகள் தவிர்த்தனர். தற்போது, தென்மேற்கு பருவமழை ஓய்ந்துள்ளதால், மீண்டும் தக்காளி சாகுபடியில் தீவிரம் காட்டுகின்றனர்.அதிலும், ஒரே மாதிரியான, தரமான காய் உற்பத்திக்கு, சொட்டுநீர் பாசனம் அமைத்து, நாற்று நடவு செய்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன், இந்த பருவத்திற்கான அறுவடை காலம் நிறைவடையும் வகையில் கணக்கிட்டு, சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X